Thursday, July 1, 2010

கொஞ்சம் வரலாறு


புவியியலையும் வரலாற்றையும் ஒரே நூலில் நெய்து மனதிற்குள் ஒரு network செய்து வைப்பது interesting job. அதை விட சுவாரஸ்யம் அதை பகிர்ந்து கொள்வது. வேறு எதுவும் எழுதக் கிடைக்கவில்லை எனவே இன்று கொஞ்சம் வரலாறு. வரையறை இல்லாமல் தோன்றியவாறு எழுதுகிறேன். ஆங்காங்கே பல தலைப்புகள் தாவக்கூடும்.

உலக வரைபடத்தையும் வரலாற்றையும் கவனிக்கும் போது, மத்திய கிழக்கு நாடுகள் அல்லது வளைகுடா நாடுகள் (Bay countries) கடந்து வந்த பாதை வியக்க வைக்கிறது. மூன்று மதங்கள் (யூத, கிறிஸ்துவ, இஸ்லாமிய) தோன்றிய இடம் அது. மற்ற இரண்டு மதங்கள் (இந்து, புத்த) இந்தியாவில் தோன்றியது. முதலில் தோன்றியது (அல்லது வரலாற்றில் முதலில் ஏறிக்கொண்டு பயணத்தை தொடங்கியது) இந்து மதம். கி.மு 3000 -தில் தற்போதைய உத்திர பிரதேசம் அருகே கிருஷ்ணர் பிறந்தார். (என்னுடைய பகுத்தரிவுகளை இங்கு புகுத்தாமல் வரலாற்றை மட்டும் எழுதுகிறேன்). மெதுவாக இந்தியா என்று தற்போது அழைக்கப்படும் நிலப்பரப்பு முழுவதும் இந்து மதம் பரவியது. கி.மு 2000 -தில் ஆப்ரகாம் பிறந்ததை ஒட்டி தற்போதைய இஸ்ரேல் உள்ள இடத்தில யூத மதம் (Judaism or Jews) தோன்றியது. ஆனால் பரவவில்லை 600 ஆண்டுகளில் மறைத்துவிட்டது. ஆங்காங்கே சில யூதர்கள் சிதறிபோய் வாழ்ந்தனர். கி.மு 480 இல் உத்திர பிரதேசத்தில் சித்தார்த்தன் புத்தனாக மாறியதை தொடர்ந்து புத்த மதம் இந்தியாவின் வடகிழக்கு முழுவதும் பரவியது. இமயத்தை தாண்டி அதை எடுத்துசென்றது யார் என்பது ஒரு புவியியல் ஆச்சரியம். இயேசு ஜெருசலம் நகரில் (Jerusalem) சிலுவையில் அறையப்பட்டதை ஒட்டி தற்போதைய இஸ்ரேலில் இருந்து கிறிஸ்துவ மதம் தோன்றி மேற்கு நோக்கி பரவியது. நினைவில் வைக்கவும் : இயேசுவை காட்டிக் கொடுத்த யூதாஸ் ஒரு யூதன். இஸ்ரேலில் தோன்றி வளராமல் இருந்த மதம் தான் யூத மதம். சவூதி அரேபியாவில் முகமது பிறந்ததை ஒட்டி இஸ்லாமிய மதம் மத்திய கிழக்கு நாடுகள் அனைத்திலும் பரவி இஸ்ரேலில் முட்டி நின்றது.

"ஆயிரத்தில் ஒருவன்" படத்தில் சோழர்கள் மறைந்து வாழ்ந்ததை போல ஆங்காங்கே வாழ்ந்த யூதர்களைத் திரட்டி கடந்த 1948 இல் இஸ்ரேல் என்ற நாட்டைக் கட்டினார்கள். யூத மறுமலர்ச்சி.

{நிற்க: இங்கு சொல்லியாகவேண்டியது, Adolf Hitler -க்கு யூதர்களின் மேல் இருந்த தனிப்பட்ட கோபத்திற்கு காரணம் Hitler -இன் தந்தை Alois Hitler ஒரு யூதருக்கு பிறந்தவர் அனால் Alois இன் தாயால் (Adolf -இன் பாட்டி) கடைசிவரை அதை சட்டத்தின் முன் நிரூபிக்க முடியவில்லை. Adolf Hitler ஆட்சியின் கீழ் யூதர்கள் கொல்லப்பட்டு, இரண்டாம் உலகப்போர் முடிவு பெற்றபோது, யூதர்களுக்கு ஒரு தாயம் வேண்டியிருந்தது, எனவே இஸ்ரேல் மலர்ந்தது}

மூன்று மதங்களும் சந்திதுகொள்ளும் இடம் இஸ்ரேல், ஒரு மத்திய கிழக்கு நாடு. யூதத்தின் தாயகம், இயேசு கழுதை மீது ஊர்வலம் வந்து, சிலுவையை சுமந்த மண், முகமது நபிகளின் முதல் சொற்பொழிவு நடத்த இடம் என்று ஜெருசலம் மூன்று மதங்களுக்கும் புனித பூமி. அதை சொந்தம் கொண்டாட இஸ்ரேலும் (யூதமும்) பாலஸ்தீனமும் (இஸ்லாமியமும்) கடந்த 30 ஆண்டுகளாக போரிட்டு வருகிறது. புனித பூமியில் இன்று பீரங்கிகளும், துப்பாக்கிகளும், வெடிகுண்டுகளும், ரத்தமும் தேங்கி நிற்கிறது. இன்று புழக்கத்தில் இருக்கு பல ஆயுதங்களை வடிவமைப்பது இஸ்ரேல். சிறிய நாடாக இருந்தாலும் அணு ஆயுதம் உற்பட பல ஆயுதங்களை அதிக அளவில் உற்பத்தி செய்கிறது. Israel Special Weapons என்று சொல்லும் அளவிற்கு முன்னேறுகிறது.

பாலஸ்தீனியத்தை இஸ்ரேலிடம் இருந்து மீட்கப் போராடிய யாசர் அரபாத் தற்கால அசோகர் என்று கூறலாம். ஆயுதத்தில் இருந்து அகிம்சைக்கும் மாறியவர். அவருடைய கடைசி ஆசையான "தன் உடலை ஜெருசலத்தில் புதைக்க வேண்டும்" என்பதை இஸ்ரேல் மறுக்கவே, அவர் அயல் நாடான ஜோர்டானில் (Jordan) புதைக்கப்பட்டார்.
சுவாரஸ்யம் என்னவென்றால் உலகத்தில் No. 1 உளவுப் பிரிவு இஸ்ரேலுடையது (அதற்க்கு முன் அமெரிக்க CIA எல்லாம் ஜுஜுபி) அந்த உளவுப்படை போட்ட கொலை திட்டங்களில் இருந்து 256 முறை தப்பியவர் யாசர் அராபாத் . அத்தனை ராணுவ நுணுக்ககள் தெரிந்தவர். இறுதியல் இயற்கை மரணம் அடைந்தார்.

[CIA போடும் திட்டங்களில் இருந்து பிடல் காஸ்ட்ரோ (Fidel Castro) இன்னுமும் தப்பிகொண்டிருக்கிறார். சே குவராவின் தொழராயிற்றே]

இஸ்ரேலின் கிழக்கில் இன்னொரு ரத பூமி ஈராக். 20 ஆண்டுகளுக்கு முன் இரானிடம் வளைகுடா போர் செய்து உலகத்தை எரிபொருள் தட்டுப்பாட்டால் ஸ்தம்பிக்க வைத்தது. எனக்கு நினைவிருக்கிறது எங்கள் பள்ளி வாகனம் டீசல் இல்லாமல் நடுவழியில் நிற்பதும் என் அப்பா சைக்கிளில் டீசல் வாங்க விரைவதும். அப்போது நான் ஒன்றாம் வகுப்பு. வளைகுடா (Bay) என்பது இடத்தை குறித்தாலும் எனக்கு என்னவோ காரணப் பெயர்போலவே தோன்றுகிறது. "யாருக்கும் வளைந்து கொடுக்கா தேசங்கள்". அடுத்தடுத்து ஆப்கானிஸ்தானும், இராக்கும் அமெரிக்காவுடன் யுத்தத்தை சந்த்தித்து அவ்விடத்தை மேலும் ரத்தபூமியாக மாற்றியது.

(ஐரோப்பிய தமிழர்கள் கேப்டன் அலி என்ற கப்பலுக்கு "வணங்காமண்" என்ற காரணப் பெயர் சூட்டி நிவாரணப் பொருள் அனுப்பிவைத்தனர். இலங்கை அரசு அப்பெயரைக் கண்டித்து சென்றவருடம் அனுமதி மறுத்தது நினைவுக்கு வருகிறது. ஈழமும் யாருக்கும் வணங்காமண் )

கி. மு.-வில் வளைகுடா நாடுகளின் வளத்தை ஒப்பிட்டால் இன்று உலகமே பிச்சைகார நிலையில் தான் இருக்கிறது. Persia தற்போதைய இரான் ஒரு காலத்தில் கட்டிடக் கலை, சிற்பம், நெசவு (கம்பளி), பானை ஓவியம் என்று ஒரு நாகரீகத்தின் தோன்றிடமாக இருந்தது. (Persian Civilization). அதற்க்கு அருகில் Mesopotamia (தமிழில் பாரசீகம்) தற்போதைய இராக் மற்றும் சிரியா. செல்வ செழிப்பிற்கு புகழ்போன இடம். Tigris-Euphrates river system என்று வரலாற்றில் குறிப்பிடப் படுவது அங்கு தோன்றிய நாகரீகத்தைதான் (Mesopotamian Civilization). பாபிலோன் நகரம் (Babylon - famous for தொங்கும் தோட்டம்) வளம் மிக்க பண்டைய நகரங்களில் ஒன்று. அதுதான் தற்போது Baghdad - capital of Iraq. Alexander The Great அங்கு படையெடுத்த போது அந்நகரின் அழகில் வியந்தது ஆச்சரியமில்லை. Alexander -ரின் இரண்டு மனைவிகளும் Persia தேசத்தை சேர்ந்தவர்கள் தாம். Roxana -From a Noble Bactrian Family and Stateira - Princess of Persia. ஈரானின் பண்டைய வளத்தை தெரிந்து கொள்வதற்கு தற்போது வெளியாகியுள்ள Prince of Persia படத்தை பார்க்கலாம். But it has no relevant to history. Fantasy என்ற genre (சரியான உச்சரிப்பு 'ஜன்ரா") -வை சார்ந்த படம்.

ஒரு நாட்டை கைப்பற்றியவுடன் அதன் கலாச்சாரத்தையும், வளத்தையும், வரலாற்றையும், அறிவியலையும், கலையையும், இலக்கியத்தையும் அழிப்பது அந்நாட்டை அடிமை நாடாக மாற்ற உதவும். இப்படி மத்திய கிழக்கு நாடுகள் சந்தித்த எண்ணிலடங்கா யுத்தங்களில் அதன் வளம் முற்றிலும் அழிந்துவிட்டது. விஞ்ஞானிகளும், சிற்பிகளும், புலவர்களும் கொல்லப்பட்டனர். இராக்கில் தற்போது எஞ்சியவை துப்பாக்கி குண்டுகளின் சுவடுகள் தாங்கிய கட்டிடங்கள் மட்டுமே.

இராணிற்கு கொஞ்சம் வட கிழக்கில் உஸ்பெகிஸ்தான், மொகலாயர்களின் தாயகம். (நிற்க: அணைத்து வளைகுடா நாடுகளையும் வென்று கி.மு. 325 இல் அலெக்ஸ்சாண்டர் சிரமப்பட்டு இமயத்தை தாண்டி இந்தியாவின் போரஸ் (Porus) சாம்ராஜிய படையின் வீரத்தை கண்டு மலைத்தார். முதல் முறை யானை படையை கண்டதால் தன் வீரர்கள் அஞ்சியதாலும் நெடுநாள் பயணத்தில் வீரர்கள் சோர்வு அடைந்ததாலும் இந்தியாவை கைப்பற்றும் என்னத்தை விட்டு திரும்பினார்). அனால் கி .பி 1520 இல் உஸ்பெகிஸ்தான் மன்னர் பாபர் அப்கானிஸ்தான் வழியாக பஞ்சாப்பை கைபற்றி நீண்டநாள் பானிபட் யுத்தத்திற்கு (Battle of Panipat) பிறகு இந்தியாவின் ராஜபுதிரர்களை வென்று டெல்லியை கைபற்றினார். அன்றிலிருந்து 300 ஆண்டுகள் இந்தியா மொகலாயர்களின் கீழ் இருந்தது.

உலகிற்கு மதங்களை கொடுத்து, நாகரீகத்தை கொடுத்து, கலைகளை அறிமுகப்படுத்தி, மாமன்னர்களைக் உருவாக்கிய நிலம் மத்திய கிழக்கு / வளைகுடா தேசங்கள். அது கடந்து வந்த பாதையை கவனிக்கும் போது விழிகளை விரியச்செய்யும். வளைகுடாவின் மேற்கில் கிரேக்க (Greece) கலாச்சாரம் உலகின் வளம்மிக்க ஒன்று. ரோமாபுரி (Rome- capital of Greece) இல்லாமல் உலக வரலாறு இல்லை. Julius Caesar இயேசுவிற்கு 100 வருடம் முன்னாள் பிறந்து கிரேக்க சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தி பல விஞ்ஞான வளர்சிகளுக்கு வித்திட்டவர். Caesar எகிப்த் (Egypt) மீது படையெடுத்து வென்று அதை Roman Province ஆகா அறிவித்தார். எகிப்தின் கடைசி ஆட்சியாளர் Cleopatra VII. இவர் Caesar இன் காதலி (திருமணம் ஆகவில்லை. Caesar க்கு வேறு மனைவிகள் மூன்று பேர் இருந்தனர்.) Cleopatra கி .மு. 47 இல் Caesar இன் குழந்தையை பிரசவிக்கும் போது சிரமப் படவே மருத்துவர்களின் சொற்களையும் மீறி Caesar தன் வாளால் Cleopatra வின் வயிற்றை கிழித்து குழந்தையை எடுத்தார். Caesarion என்று அக்குழந்தைக்கு பெயரிட்டனர். உலகின் முதல் Caesarean Delivery செய்தவர் Caesar, எனவே அப்பெயர் வந்தது. தற்போது அதை scissorian -என்றும் அழைக்கபடுகிறது. But truth behind is still debated. இஸ்ரேலின் மேற்கு எல்லை எகிப்தை (Egypt) தொடுகிறது.

வரலாற்றை திரும்பிப் பார்த்தல் உலக வரைபடத்தை தீர்மானித்தவர்கள் சில தனி மனிதர்கள். எத்தனை நூறு கோடி மக்கள் வாழ்ந்து மறைந்திருந்தாலும் புத்தர், கிருஷ்ணர், இயேசு போல், Alexander, Caesar போல், Babar, Akbar போல், Fidel Castro, Yasar Arafat போல், Hitler, Mussolini போல் சில தனி மனிதர்களே உலக வரலாற்றையும், வரை படத்தையும் தீர்மானித்துள்ளனர்.

"பிரிந்து வாழ்ந்தவர்கள் ஒன்று கூடி உருவாகிய ஒரு தேசம் என்னை வணங்க மறுக்கும், தன் ஆயுதத்தாலும் ராணுவத்தாலும் உலகை அச்சுறுத்தும். அந்நாட்டை அடக்க உலகின் மொத்த நாடுகளும் கைகோர்க்கும்" என்று பைபளில் இயேசு கூறியிருப்பதாகவும் அது விரைவில் நடக்கும் என்றும் இங்கு நண்பர்கள் சொல்கிறார்கள். நான் அதை ஒரு கதையாக ரசிக்கிறேன்.

எழுதிக்கொண்டே போகலாம், வரலாறு என்றும் சுவாரஸ்யம் தருகிறது. உங்கள் பொறுமை கருதி முடித்துக்கொள்கிறேன். இன்னொரு சந்தர்ப்பத்தில் மேலும் விவாதிப்போம். நன்றி.

No comments:

Post a Comment