புறநானூறு - 92
"யாழொடுங் கொள்ளா பொழுதொடும் புணரா
பொருளறி வாரா வாயினுங் தந்தையர்க்
கருள்வத் தனவாற் புதல்வர்தம் மழலை
என்வாய்ச் சொல்லு மன்ன வொன்னார்
கடிமதி லரண்பல கடந்த
நெடுமா நெஞ்சிநீ யாருளன் மாறே"
திணை - அது
துறை - இயண்மொழி
அதியமான் நெடுமான் அஞ்சியை ஒளவையார் பாடியது
பொருள் - அவன் வாழ்தலைக் காட்டிலும் ஒளவையார் நெடுநாள் வாழ்தலே இவ்வுலகிற்கு ஆக்கம் என்று நெல்லிக்கனியை தனக்கு கொடுத்ததை எண்ணி ஔவை மனம் குழைந்து நாக்குழறி தான் நினைத்தவாறெல்லாம் அதியமானை பாராட்ட வேண்டி "யாழ்லோசை போல் அல்லாமலும், நேரத்தோடு பொருந்தாமலும், போருளில்லாமலும் தம் குழந்தை உளறினாலும் அதை கேட்டு தந்தையர்க்கு அருள் வருவது போல என் சொற்களும் உனக்கு அருள் சுரக்கும் தன்மையுடையன" என்று பாடினார்.
Do you know? அதியமான் என்ற குறுநில மன்னர் பரம்பரையின் தலைநகரம் தகடூர் (இன்றைய தருமபுரி). அதியமான்களுள் ஒருவனான "நெடுமான் அஞ்சி" ஔவைக்கு நெருக்கமானவன்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment