என் தேசத்துப் பெண்
ஒரு மெய்யெழுத்து
நெற்றி மீது என்றும் புள்ளி சுமக்கிறாள்.
வாழ்க்கை ஒரு இலக்கணப் பிழை
இங்கு ஒரு உயிர் நீங்கினால்
அவள் உயிர்மெய் ஆகிறாள்.
ஒரு மெய்யெழுத்து
நெற்றி மீது என்றும் புள்ளி சுமக்கிறாள்.
வாழ்க்கை ஒரு இலக்கணப் பிழை
இங்கு ஒரு உயிர் நீங்கினால்
அவள் உயிர்மெய் ஆகிறாள்.
வாழ்க்கை இலக்கணம் என்றும் புரியாதவையே..
ReplyDeleteநன்று.. :)
Thanks. The site was hibernated for long time, but it happened yesterday to open and brush up some oldies and put them in new location.
ReplyDeleteவாசிக்கும் போதே மனதை வசீகரிக்கும் அழகிய சிறு கவிதை!
ReplyDelete"இங்கு ஒரு உயிர் நீங்கினால்
அவள் உயிர்மெய் ஆகிறாள்"
இதற்கான பொருளை விளக்க முடியுமா?
நன்றி நாகா.
Deleteதமிழ் இலக்கணத்தில் உயிரும் மெய்யும் "சேர்ந்தால்" உயர்மெய் பிறக்கும்.
அதற்க்கு மாறாக, தமிழ் சமூகத்தில் கணவனின் உயுர் "பிரிந்தால்", மெய்யெழுத்து போல இருந்த பெண்ணின் நெற்றி, உயிர்மெய் எழுத்து போல மாறி விடுகிறது.