Saturday, July 10, 2010

புலி

To those who asked me meaning of the poem "The Tyger", I have translated that into Tamil. See below. This poem is an irony (சிலேடை), William Blake actually speaks about Tiger, but it ironically represents the evil part of human soul. This poem was published in his collection "Song of Experience" (1794). In another poem "The Lamb" Blake ironically speaks on Lamb to represent good part of human soul. The Lamb was published in his another collection "Songs of Innocence" (1789). The combined edition "Songs of Innocence and of Experience" was also published (all are handwritten) and only 20 copies were sold. Finally William Blake died of poverty and of heavy dept. But now his poems are well praised and are used in elementary school curriculum worldwide. 

My Tamil translation of "The Tyger" (Instead of just giving summary or meaning, I translated the poem into Tamil. I didn't change the meaning and I tried to maintain the rhythm. You read comparatively this with above English version)

நேற்று அனுப்பிய TIGER   என்ற William Blake -இன் பாடலை தமிழில் மொழி பெயர்க்க முயன்றுள்ளேன். கீழே காண்க 


புலி 

நீண்ட இருள் சூழ் காட்டில்
அனல்கொண்ட விழியோ டலையும் புலி
உன் கொடுந் தேகஞ் செய்யத் 
துணிந்த கரம் எக்கடவு ளுடையது?


எந்த ஆழத்தில் எந்த வானத்தில் 
கண்களுக்கான தழல் மூட்டப் பட்டது? 
எவ்வலிய கைகள் சென்று அந்நெருப்பைப் பறித்தது?
ரக்கை கொண்டதைச் சுமக்கத் துணிந்தது யார்? 

எத்தனை மா வல்லமை கொண்ட 
தோள்கள் சேர்ந்து திரித்து முடிந்தனவுன் இதயத்தை?
உம திதயந் துடிக்கத் தொடங்கியகணம் அதை
கண்டஞ்சி உறைந்தனவோ அத்தோள்களுங் கால்களும்?

எவ்வுலையில் உருக்கி, சுத்தியல் கொண்டடித்து
சங்கிலியாட் பிணைத்துச் சமைத்தானது உன்மூளை?
எத்தளத்தில் இட்டு வளைத் துருவானதோ? இறுதியில் 
உன் வன்சுரம் கண்டு அக்கொல்லனுக்கு ஆவிபோனதோ?

பூமியை நோக்கிக் கணைகள் எய்திவிட்டுப் பின் 
வருந்திக் கண்ணீரால் சுவர்க்கம் துடைத்த போது
தெய்வங்கள் தம் செயல்கண்டு சிரிக்க முடிந்தனவோ?
ஆட்டுக்குட்டி செய்த கைகள்தாம் உமது அங்கமும் வடித்தனவோ?  

நீண்ட இருள் சூழ் காட்டில்
அனல்கொண்ட விழியோ டலையும் புலி
உன் கொடுந் தேகஞ் செய்யத் 
துணிந்த கரம் எக்கடவு ளுடையது?

No comments:

Post a Comment