Monday, February 28, 2011

கார் பொழுது


நீ குளித்த நீர் சேர்ந்த ஓடை

ஓடித் திரிந்து கடல் சேர்ந்து காய்ந்து

மேகமாய் மேய்ந்து பெருகி அலைந்து

நாடு கடந்து நானிருக்குந் தெருவிடை வந்து

வான் இடித்துத் தேன்மடை திறக்க

நானென்ன குடைவிரித்து அணையவா?

இமைமூடி நிமிர்ந்து உடல் சிலிர்க்க நனைகிறேன்.

மழைக் காலம்.


-ச

2 comments:

  1. இமை மூடி இதைப் படித்து அசை போட நிசமாகவே உடல் சிலிர்க்கிறது!

    ReplyDelete