Wednesday, December 22, 2010

முடியல - 2


கடந்த ஜூலை மாதம், இயற்கை உணவுகளை மட்டும் இனி சாப்பிடவேண்டும் என யோசித்து முடிவெடுத்தேன். ரொம்ப வெயில் அடித்தால் இப்படி ஏதாவது தோன்றும். ஞாயிறு நன்மதியம் 1 மணிக்கு 105 F வெப்பத்தில் சைக்கிளில் கிளம்பினேன். முன்னதாக இணையதளத்தில் தேடி "The Earth - Natural Food Store" -இன் முகவரியையும், Google Maps -இல் வழியையும் பார்த்து வைத்திருந்தேன். 309 South Flood Street -ஐ அடைய 5 km அழுத்த வேண்டும்.

மொட்டை வெயிலில் சட்டை நனைய அழுத்தியதில் பழைய நினைவுகள் எல்லாம் தோன்றியது. போன ஜென்ம ஞாபகம் வரவில்லை என்றாலும், வெயிலோடு விளையாடிய பால்ய வயது காட்சிகள் நான் போகும் பாதை எங்கும் படர்ந்தன. "ஆட்டோகிராப்" படத்தில் வருவது போல் என் சைகிள் டயருக்கு முன்னால் உள்ள காட்சிகள் கிராபிக்சில் கரிசல் காடுகளாய் மாறின. கோடை காலங்களில் ஓடித்திரிந்த பொழுதுகள், வேப்ப மரத்தின் வாசம், சுள்ளி பொறுக்கி சும்மாடு வைத்துச் சுமக்கும் கிழவி, முக்காடு போட்டு எருமை மேய்க்கும் வடுகன், புதுப்பை கைகாட்டியில் இருந்த பூவரச மரத்து நிழல், நொங்கு வண்டி என கோடைப் பெரும்போழுதின் கருப்பொருள், உரிப்பொருள் ஊடாகப் பயணித்து நான் சேரவேண்டிய "The Earth - Natural Food Store" அருகில் வந்து சேர்த்தேன்.

கடையின் முன்பு இருந்த பசுமையான மரம் பெயர்ப்பலகையை மறைத்திருந்ததால் அடையாளம் தெரியாமல் சுற்றி இருந்த வீதிகள் அனைத்திலும் தேடினேன். யாரிடமாவது கேட்கலாம் என்றால் கண்ணனுக்கு எட்டிய தூரம் வரை தெருவில் யாரையும் காணாம். அது வழக்கமானது தான், Norman பெரிய city அல்ல. வீடுகளும் மரங்களும் நிறைந்த சிறிய நகரம். எல்லா வீடுகளும் பூட்டியே இருக்கும். கதவை தட்டினாலும் சங்கிலிக்கு பின்னல் இருந்துதான் எட்டிப் பார்ப்பார்கள். கொளுத்தும் வெயிலில், வெறித்த தெருக்களில், பூட்டிய வீடுகளுக்கு நடுவில் ஒற்றையாய் நின்ற அனுபவம் நிறைய உண்டு. எங்கள் சொந்த ஊரை சுற்றிய கிராமங்களுக்கு வருடந்தோறும் மே மாதங்களில் எங்கள் பள்ளி விளம்பரத்துக்காக சென்றதுண்டு. பெரும்பாலும் வீடுகள் பூட்டியே இருக்கும், கதவுகளில் நோட்டீஸ் சொருகிவிட்டு வருவோம்.

கடைக்கு நேர் எதிரில் இருந்த ஒரு வீட்டிலிருந்து மூன்று வயது குழந்தை வெளியே வந்தது. சிவப்பாகத்தான் இருந்தது ஆனால் மூன்றாம் தலைமுறை முன்னோர்கள் ஆபிரிக்காவில் இருந்து இடம் பெயர்ந்த சாயல் தெரிந்தது. அதன் பெற்றோர்கள் பிக்னிக் செல்வதற்கான பொருட்களோடு வெளியே வந்தார்கள். அவற்றை காரில் ஏற்றிக்கொண்டிருக்கும் போது என்னைப் பார்த்து, "Hi, how's the day? How could I help you?" என்றார் கணவர். கறுப்புக் கண்ணாடியை கழற்றிவிட்டு நான் விவரத்தை சொன்னதும், அப்படி ஒரு கடையை அவர் பார்த்ததே இல்லை என்று மனைவியிடம் விசாரித்தார். பச்சை கலர் கட்டடம்  அதன் பின்னால் வட்டமாக கார் பார்கிங் இடமும் உள்ள அந்த கடைக்கு தான் ஒருமுறை சென்றிருப்பதாகவும், ஆனால் இடம் சரியாக நினைவில்லை என்றும் சொன்னாள் தலைவி.

உடனே தலைவர் டவுசர் பாக்கட்டில் இருந்து iPhone -ஐ எடுத்தார். சும்மா இருந்த செயற்கைக் கோலை சொறிந்து நான் சொன்ன முகவரியை GPS technology -ஐ கொண்டு தேடினார். அதை என்னிடம் காண்பித்து, "நாம் இப்போது இங்கே நிற்கிறோம், இப்படியே ஒரு மைல் தெக்கால போய், சோத்தாங்கை பக்கம் திரும்பினால் ஒரு பள்ளிக்கூடம் வரும், அதை ஒட்டி சிறிய பச்சை கட்டடம் இருக்கும் அதுதான் நீங்கள் தேடி வந்த கடை" என்றார்.
தலைவியும் அதை ஆமொதித்ததைத் தொடர்ந்து நன்றி சொல்லி விடைபெற்றேன். இப்போது சைக்கிளில் செல்லும் போது வேறு ஞாபகம் தொற்றிக்கொண்டது. விஞ்ஞான வளர்ச்சியை எண்ணி வியந்தேன், முகவரியை வைத்துக்கொண்டு நம்ம ஊரில் எத்தனை பேரிடம் வழி கேட்டிருப்போம், கதவு எண்ணை பார்த்துக்கொண்டு எத்தனை தெருக்கள் நடத்திருப்போம், இப்போது கணினியை தட்டினால் வரைபடம் வருகிறது, 500 ஆண்டுகளுக்கு முன் புவியியலாளர்கள் கப்பலில் பயணித்து கண்டறிந்த உலக வரைபடம் எப்படி செயற்கை கோல் வரைபடத்தோடு கச்சிதமாக ஒத்துப்போகிறது, என்றெல்லாம் வியந்து இறுதியாக அவர் சொன்ன அந்த பள்ளிக்கூடத்திற்கு வந்து சேர்ந்தேன். "Edmond Elementary School, 918 South Flood Street" என்று போட்டிருந்தது. பக்கத்தில் பச்சை கட்டடம் எதுவும் இல்லை. நான் தேடிவந்த கதவு எண் 309.

காணலில் கருகி நின்ற நான், என் அறை நண்பனுக்கு போன் செய்து, முகவரியை கணினியில் சரிபார்க்கச் சொன்னேன். 309 சரியான எண்தான் என்று சொன்னவன், கடையின் தொலைபேசி எண்ணையும் கொடுத்தான். கடைக்கு அழைத்து வழி கேட்டேன். 918 இல் இருந்து பின்னோக்கி வாருங்கள் 309 வரும் என்றார். இதைத் தான நாங்க எங்க ஊரிலும் செய்வோம், என்று வந்த வழியே பயணித்தேன். இப்பொது என் எண்ணங்கள் என்னவாக இருக்கும் என்று நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு வீடாகப் பார்த்து கடைசியில் எனக்கு வழி சொன்னவர் வீட்டுக்கே வந்து நின்றேன். வீடு பூட்டியிருந்தது,கதவு எண் 308 என்று போட்டிருந்தது, எதிரில் பார்த்தேன் "309 The Earth - Natural Food Store" என்ற பச்சை கட்டடம் இருந்தது. அடப்பாவிகளா எதிர்த்தாப்பல இருக்கிற கடையை இதுவரைக்கும் எட்டிக்கூட பார்த்ததில்லையா! பத்து மீட்டருக்கு அந்தப்பக்கம் இருக்கும் கடையை தேட ஆயிரம்  கிலோமீட்டருக்கு அந்தப்பக்கம் இருக்கும் satellite தேவைப்படுது! தெக்கையும் வடக்கையும் என்னை அலைய விட்டதுதான் மிச்சம். 105 F சூட்டில் என் மனநிலை  உங்களுக்கு புரிந்திருக்கும்.

முழுவதுமாக dehydrate ஆகி கடைக்குள் சென்றேன், அது இயற்கையாக விளைத்த காய்கறிகள் விற்கும் கடை. அங்கிருந்த பெண் , Green Environment-ஐ ஊக்குவிக்க, சைக்கிளில் வரும் வாடிக்கையாளருக்கு 20% தள்ளுபடி தருவோம் என்று சொன்னார். காதில் தேன் வந்து பாய்ந்தது.





Saturday, August 7, 2010

கொஞ்சம் வரலாறு - பகுதி 2

திரிச்சூரில் யானை ஒன்று திமிறிக்கொண்டு வந்தால் தெருக்கள் தெறித்துக்கொண்டு ஓடும். அதை அடக்குவதற்குள் முழு நீளப் படம் எடுத்து மூன்று நாட்கள் செய்திகளில் ஓட்டுவோம். கி.மு.327 -இல் அலெக்ஸாண்டர் இந்தியாவில் நுழைந்து பஞ்சாபின் போரஸ் மன்னனை போரில் வீழ்த்தினான்.  அலெக்ஸாண்டர் யானைகளை முதன் முறையாக சந்தித்ததும் தன் குதிரை Bucephalus -ஐ இழந்ததும் வரலாற்று சிறப்பு மிக்க இந்த போரில் தான். அடுத்த போருக்கு ஆயத்தமான படை இருபதாயிரம் குதிரை மற்றும் இருபதாயிரம் காலாற்படை வீரர்களோடு கங்கையை அடைந்தது. கங்கையின் அக்கரையில் 'நந்தா' சாம்ராஜ்யத்தின் கந்தாரா என்ற இந்திய மன்னர் இரண்டு லட்சம் காலாற்படை வீரர்கள், என்பதாயிரம் குதிரைகள், எட்டாயிரம் தேர்கள், ஆறாயிரம் யானைகளோடும் காத்திருந்தான். இந்த செய்தியை கேட்ட அலெக்ஸாண்டரின் வீரர்கள் கிழக்கு நோக்கி பயணிக்க மறுத்தனர். அலெக்ஸாண்டர் மனமுடைந்து வீடு திரும்ப சம்மதித்தான்.

ஒரு யானை நம் முன்னால் ஓடிவந்தாலே கிணற்றுக்குள் குதித்துவிடுவோம், யோசித்துப் பார்க்கிறேன் ஆறாயிரம் யானைகள் ஒன்றாக எதிரில் ஓடிவந்தால் எப்படி இருக்கும்! 

இந்தியாவிற்கு மேற்கே ஆசியாவிலும் ஐரோபியாவிலும் அவ்வளவு யானைகள் இருந்ததாக தெரியவில்லை. யானைகளை முதன் முதலில் போரில் பயன்படுத்திய பெருமை இந்தியர்களையே சேரும். சரியான காலத்தை சொல்ல முடியாவிட்டாலும் கி.மு 2000 -ஆம் ஆண்டுகளைப் பற்றிய வேதத்தில் (Rigveda) இந்திரனிடம் ஐராவதம் என்ற தெய்வீக வெள்ளை யானையும் மேலும் பல யானைகளும் இருந்ததாகக் கூறப்படுகிறது. அதன் பின் தாய்லாந்து, இந்தோனேசியா போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் யானைகளின் பயன்பாடு பரவியது. அலெக்ஸாண்டரின் இந்திய வருகைக்குப் பின் அவன் மேற்கே ஓட்டிச்சென்ற யானைகள் கிரேக்கத்திலும் பயன்பட்டது. நடுவில் இருந்த அரேபிய பாலைவனங்களில் "கிழக்கே போன அலெக்ஸாண்டர் ஏதோ டைனோசர்களை கூட்டிக்கொண்டு வருகிறான்!" என்பதுபோல பார்த்திருப்பார்கள். 

நம்ம சோழர்களைப் பற்றி நெடுக்க (நீளமாக) சொல்லியாக வேண்டும். வடக்கே அலெக்ஸாண்டர் இந்தியாவை எட்டிப்பார்த்த காலகட்டத்தில்தான் அதைப் பற்றி எந்த சலனமும் இன்றி இங்கு சோழர் என்ற சமூகம் படை திரட்டி ஆட்சியைத் தொடங்கியது. கி.மு 300 -களில் தொடங்கி கி.பி 1200 வரை பதினைந்து நூற்றாண்டுகள் தென் இந்தியாவை ஆண்ட சோழ மன்னர்களை முன், இடை, பின் என்று வரையறுக்க முடியும். 15 நூற்றாண்டுகள் என்றால் எதனை தலைமுறைகள் என்று கணக்கிட்டுக் கொள்ளுங்கள். சராசரியாக ஒரு மன்னன் 40 ஆண்டுகள் ஆட்சி செய்தான் என்று வைத்தால் கிட்டத்தட்ட 50 சோழ மன்னர்கள் அடுத்தடுத்து ஆட்சியில் இருந்திருக்க வேண்டும். 15 நூற்றாண்டுகள் ஆண்டு நம் நாட்டையும், கலாச்சாரத்தையும், மொழியையும், நிலத்தையும் வளப்படுத்திய பரம்பரையை வெறும் 7 நூற்றாண்டுகளில் மறந்துவிட்டோம். பெயர் கூட ஞாபகத்திற்கு வராது. வாரிசுகள் எங்கே போயின என்பது தெரியாது. வரலாற்றை நாம் பேணிக் காப்பதன் அடையாளம் இது. 

சோழ மன்னர்கள் (இவர்களுக்குள் இருந்த உறவுமுறைகள் தெளிவாகவில்லை) 


கி.மு.300 - கி.பி.150 வரையிலான முற்கால சோழர்களைப் பற்றி சங்க இலக்கியம் அவ்வளவாக சொல்லவில்லை என்றாலும் இலங்கையின் பாளி மொழியில் எழுதப்பட்ட புனிதநூலான 'மகாவம்சம்', அலெக்ஸ்சான்ட்ரியாவை சார்ந்த வணிகன் ஒருவனால் எழுதப்பட்ட 'எரித்ரேயன் கடலின் வழிகாட்டி' (Periplus of the Erythraean Sea), புவியியலாளர் Ptolemy -யால் எழுதப்பட்ட நூல், மற்றும் சில ஜென், புத்த மத நூல்கள் தகவல்கள் தருகின்றன. 

முற்கால சோழர்களில் புகழ்பெற்றவன் கரிகாலன். உலகின் முதல் அணையான கல்லணையை கட்டியவனும் வட இந்தியாவை வென்று இமயத்தில் கொடி நட்டியவனும் இவனே. களப்பிரர்களாலும் பல்லவர்களாலும் பாண்டியர்களாலும் தோற்கடிக்கப்பட்டு இடைக்கால சோழர்கள் புகழ் இழந்து காவிரிக் கரையில் உறையூரில் குறுநில மன்னர்களாக கி.பி. 3 - கி.பி 9 ஆம் நூற்றாண்டுவரை வாழ்ந்தனர். பின் விஜயாலய சோழன் கி.பி. 9 ஆம் நூற்றாண்டில் அரியணை ஏறி பிற்கால சோழ சாம்ராஜ்யத்தை தொடங்கினான். சோழ மறுமலர்ச்சியால் மற்ற அரசர்கள் இருந்த இடம் தெரியாமல் போனார்கள். ராஜ ராஜ சோழன் காலத்தில் சோழ எல்லை நான்கு திசையிலும் பரவியது. வடக்கே மைசூர், மேற்கே இலட்சத் தீவு, கிழக்கே விஜயநகர், தெற்கே இலங்கை முழுவதும் புலிக்கொடி பறந்தது. அப்போது இலங்கை 'ஈழம்' என்றே அழைக்கப்பட்டது. மீண்டும் ஈழத்தில் 'புலிக்கொடி' இனி எப்போது பறக்கும் என்று தெரியாது. 

ராஜேந்திரன் காலதில் சோழ எல்லை (கி.பி. 1044)


இந்தியாவின் மற்ற ராஜ்யங்கள்


அதன் பின் வந்த ராஜேந்திரன் சோழ சாம்ராஜ்யத்தின் உச்சத்தை எட்டினான். வரை படத்தைப் பார்க்க. வடக்கே வங்காளத்தை வென்று பர்மா வழியாக, மலேசியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் வரை எல்லையை பரப்பினான். பின் வந்தவர்கள் சில இடங்களை தோற்றபின் முதலாம் குலோத்துங்கன் கலிங்கத்தை (தற்போதைய ஒரிசா) வென்று சோழ நாட்டோடு சேர்த்தான். மூன்றாம் ராஜராஜன் கி.பி.1279 -இல் பாண்டியர்களிடம் தோற்றதால் சோழ சாம்ராஜ்யம் முடிவுக்கு வந்தது. இவனுடைய வாரிசுக்கு என்ன ஆகிறது என்பது தான் "ஆயிரத்தில் ஒருவன்" படத்தில் புனையப்பட்ட கதை. நிற்க.

 நான் சொல்லி வந்த யானைக் கதைக்கு போவோம். நான் வியப்பதெல்லாம் மேல் சோன்ன 15 நூற்றாண்டுகள் எத்தனை போர்களை உள்ளடக்கியிருக்கும்! சோழர்களின் அத்தனை போர்களிலும் யானைகள் வீற்றிருந்தன. ஆயிரக்கணக்கில் யானைக் குட்டிகளை போருக்கு பழக்கி தீனியிட்டு வளர்த்து, படையில் சேர்ப்பது என்பது சாதாரண விஷயமல்ல. தனி அமைச்சர்களின் கீழ் ஒரு துறையே இயங்கி வந்திருக்க வேண்டும். எங்கிருந்து அத்தனை யானைகளை பிடித்திருப்பார்கள்? ஆயிரக்கணக்கான யானைகளுக்கு எத்தனை பேர் பயிற்சி அளித்திருப்பார்கள்? ஒரே நேரத்தில் பத்து பேரை பந்தாட வல்ல யானை ஒரு சன்னமான குச்சிக்கும் அதைவிட சன்னமான பாகனுக்கும் கட்டுப்படுவது  ஏன்? நமக்கு ஓர் அறிவு அதிகம் என்பதாலா? பழைய வினித் படம் ஒன்றில் டீக்கடையில் அமர்ந்துகொண்டு வடிவேலு "சாயங்காலம் சாயங்காலம் யானைக்கு வேற சண்டை பழக்க வேண்டியிருக்கு" என்று சடைந்து கொள்வது நினைவிற்கு வருகிறது. 

ஆயிரம் யானைகளை கொன்றால் பரணி. புலவர் செயங்கொண்டார் முதலாம் குலோத்துங்க சோழன் மீது 'கலிங்கத்துப் பரணி' பாடினார். கலிங்க நாட்டின் (ஒரிசா) அனந்தவன்மன் என்ற மன்னனை கருணாகர தொண்டைமான் என்ற தளபதியின் தலைமையில் கி. பி. 1112 இல் குலோத்துங்கன் படை வென்றதுதான் கலிங்கத்துப் பரணியின் கதை. இலக்கணப் படி தோற்ற நாட்டின் அல்லது மன்னனின் பெயரில் தான் பரணி அழைக்கப் படும். கலிங்கத்தில் சென்று ஆயிரம் யானைகள் கொல்ல குலோத்துங்கன் இங்கிருந்து எத்தனை யானைகள் ஓட்டிச் சென்றிருக்க வேண்டும்? அத்தனை தொலைவிற்கு படை எப்படி நகர்ந்து சென்றிருக்கும்? ஒருவேளை இன்று கவிப்பேரரசும் வித்தககவியும் முத்தமிழறிஞரை பாடுவது போல் செயங்கொண்டார் குலோதுங்குவை பாடித் தள்ளிவிட்டாரா என்று ஐயம் எழலாம். ஆனால் அதே அரசவையில் ஒட்டக்கூத்தர் வீற்றிருந்து அதே அரசனை பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு 'குலோதுங்க சோழ உலா' பாடினார் என்னும் போது செயங்கொண்டார் புளுகியிருக்க வாய்ப்பில்லை. கூத்தன் சிறையில் இட்டிருப்பான்.  

கடற்படை பூட்டிச் சென்று, யானைகளுக்கு பெயர்போன தாய்லாந்து மற்றும் இந்தோனேசியாவை வெல்ல வேண்டுமானால் ராஜேந்திரன் எத்தனை யானைகளை தஞ்சையில் இருந்து ஏத்திச் சென்றிருப்பான்? யானைகளிலும் வலுவுடைய வீரர்கள் இருந்திருக்க வேண்டும். 'ஜோதா அக்பர்' படத்தில் அக்பர் முரட்டு யானையோடு ஒண்டியாக மல்லுக்கட்டுவது போல் காட்சிப் படுத்தியிருப்பார்கள். நிஜத்திலும் நம் மன்னர்கள் அப்படி இருந்திக்க வாய்ப்புண்டு. 

என்னோடு சதுரங்கம் ஆடுபவர்கள் என்னைக் கேட்கும் கேள்வி "ஏன் எப்பவும் யானையவே மொதல்ல எறக்குற?". மூன்று சேனைகளையேனும்  சாய்த்து விட்டுத்தான் சாகும் என் யானைகள். இந்திய துணைக் கண்டத்தில் அத்தனை போர்களிலும் முண்டியடித்துக்கொண்டு முதலில் ஓடிவந்தவை யானைகளே. பத்தாயிரம் யானைகள் நிலம் அதிர ஓடிவந்தால் எதிரி என்னதான் செய்வான் பாவம். பயத்திலேயே பாதி உயிர் போய்விடும். போர் இல்லாத காலங்களில் யானைகள் விழாக்களுக்கு பயன்பட்டிருக்க வாய்ப்புண்டா என்று தெரியாது. போருக்கு பழக்கிய யானைகள் அங்கேயும் புகுந்து துவம்சம் செய்துவிடுமோ?

இத்தனை ஆண்டு ஆட்சிக்குள் எத்தனை விழாக்கள், அரசியல்கள், சமரசங்கள், துரோகங்கள், தோல்விகள், பொறுமைகள் இருந்திருக்கும். மக்களிடம் ஆதரவு திரட்டி, நிதி திரட்டி, வீட்டிற்க்கொரு வீரன் திரட்டி படை திரண்டிருக்கும். வீரர்கள் தவிர கொல்லன், தட்சன், குயவன், நெசவாளன், சிற்பி, மருத்துவன், ஜோசியன் என படை பறைகொட்டிப் பயணப்படும். மன்னன் போருக்கு போகும் காலத்தில் கலகக் காரர்கள் தலைநகரை கைப்பற்றாமல் இருக்க விசுவாசம் உள்ள தமையன் ஒருவனை தளபதியாக்கி நகரில் விட்டுச் செல்லவேண்டும். புறத்திணை புலவர்கள் படையோடும் அகத்திணை புலவர்கள் அரண்மனையிலும் இருந்திருக்கலாம். தலைவன் வரும் வரையில் தலைவி குறத்தியின் குறிகேட்டு காத்திருப்பாள். உழவன் தஞ்சையில் நெல்லடித்து உணவு சேர்த்திருப்பன். முன்னேறிப் போகும் படை கிராமங்களை கைப்பற்றி விழாக்கள் எடுத்து, பண் இசைத்துப் பாடிவிட்டு, கோவில் கட்ட சிற்பிகளை பணித்துவிட்டு, கூடாரம் கலைத்து மீண்டும் பயணப்படும். கிராம மங்கையரோடு காதல் மலர்ந்து மன்னன் தலைமையில் மணம் முடித்து, காத்திருக்கச் சொல்லி கையசைத்துவிட்டு வீரர்கள் விடைபெற்றிருப்பார்கள். எதரி மன்னன் தானும் ஒரு படை திரட்டி  நேர் நின்றிருப்பான். போருக்கு முன்னிரவு சோற்றில் விஷம் வைக்க சதி நடந்திருக்கும், அது தோற்கவே கூடாரத்தில் சமரசம் நடந்திருக்கும், அதவும் தோற்ற பின் போர் மலர்ந்திருக்கும், பாதிப் போரில் எதிரி மன்னன் மகளைக் கொடுத்து மண்டியிட்டிருப்பான். அதை நம் தலைவன் ஏற்றால் மீண்டும் விழாக்கள், கோவில்கள், கையசைப்புகள், போர்கள். மன்னன் நிலங்களை வென்று பல பெரும் பொழுதுகளுக்குப் பின் வெற்றியோடு வீடு திரும்பினால் வாகை காத்திருக்கும், ஒருவேளை வீரம் காத்து வடக்கிருந்து செத்துப் போனால் பத்து வயதில் வாரிசு ஒன்று வாள் ஏந்தக் காத்திருக்கும். 

இதில் என் எள்ளுத்தாத்தன் வில்லேந்திச் சென்றிருக்கலாம், வாள் சுழற்றி சண்டையிட்டு இருக்கலாம், அல்லது ஒற்றனாகக் கிளம்பி புயல் வேகத்தில் குதிரை ஒட்டித் திரிந்திருக்கலாம். எள்ளுக்கிழவி  பொன் சேர்த்து வாழாமல் அணைக்கு மண் சுமக்க போயிருக்கலாம். வாழிய தமிழ் மக்கள். 

சுவடிகளில் இருந்து ஏடுகளுக்கு மாறிய நம் வரலாறு, தகடுகளில் ஏறி திரைக்கு வந்தால் மட்டுமே நம் வாரிசுகள் அதை நம்பக்கூடும். மேற்கில் போர்க்கலங்கள் திரைப்படங்கள் ஆகிவருகின்றன. நம் மொழியில் வரலாறு மற்றும் போர்களை படமாக்க மிகச்சிலரே முன்வருகிறார்கள். அவைகளும் நிதி பற்றாக்குறையால் பாதியில் நீர்த்து விடுகின்றன. நூறு குதிரைகளை வைத்து படம் முடிக்க கமல் போன்றவர்களாலேயே முடியவில்லை. பத்தாயிரம் யானைகளுக்கு எங்கு போவது. பத்து யானைகளை பச்சை திரை முன் ஓடவிட்டு CG -இல் பத்தாயிரம் ஆக்கினால் மட்டுமே முடியும். ஒரு யானை செத்தாலே செய்தியாகும் நிலையாக அவைகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. 

சமீபத்தில் போர்க்களத்தை மிகத் தத்ரூபமாக காட்டிய படம் இரண்டு மாதங்களுக்கு முன் வெளியாகிய "Robin Hood". அவசியம் பாருங்கள். 

மற்ற சாம்ராஜிய மன்னர்கள் பற்றி மேலும் வாசிக்க வேண்டியுள்ளது. நான் வாசித்து வாய் பிளந்த வரலாற்றை மட்டுமே எழுதுகிறேன். ரசனை தூண்டுதல் மட்டுமே எனது பணி, மற்றபடி புள்ளிவிவரங்கள் என்றால் எனக்கும் ஒவ்வாமைதான். 

Sunday, August 1, 2010

Inception - Movie Review

உங்களுக்கு கனவுக்குள் கனவு வந்திருக்கிறதா? கனவில் உயரத்தில் இருந்து கீழ விழும்போது தரையைத்தொட்டும் விழித்து எழாமல் இருந்ததுண்டா? இறப்பது போன்ற கனவில் அதற்க்கு பின் நீங்கள் என்னவாக இருந்து கனவுக்குள் தொடர்ந்தீர்கள்? ஒரு கனவின் முதல் காட்சியை உங்களால் துல்லியமாக மீட்டுச் சொல்லமுடியாதது என்? நீங்கள் உங்கள் கனவிற்குள் இருகிறீர்களா அல்லது இன்னொருவருடைய கனவில் கதாபாத்திரமாக இருகிறீர்களா என்று எப்படி அறிந்துகொள்வீர்கள்? என் மூளையையும் உங்கள் மூளையையும் வயர்களால் இணைத்து இருவரும் ஒரே கனவிற்குள் சென்றால் அந்த கனவை யார் வழிநடத்துவோம், என் கதாபாத்திரங்கள் உங்கள் பாத்திரங்களோடு எப்படி நடந்துகொள்ளும்? அவ்வாறு திட்டமிட்டு உங்கள் கனவிற்குள் வந்து எனக்குச் சாதகமாக ஒரு எண்ணத்தை உங்கள் மூலையில் விதைக்க முடியுமா? உங்கள் ரகசியங்கள் மற்றும் password -களை  தெரிந்துகொண்டு நான் அந்த கனவில் இருந்து தப்பிக்க முடியுமா? 

இந்த கேள்விகள் அனைத்திற்கும் விடை சொல்லும் படம் அல்ல Inception. இந்த கேள்விகளைப் பற்றி மேலும் யோசிக்க வைக்கும் படம் அது. Director Christoper Nolan -க்கு இது ஏழாவது படம் . புகழ் பெற்ற "Batman Begins" மற்றும் "The Dark Night (Latest Batman movie) " ஆகிய இரண்டும் "மௌனம் பேசியதே" மற்றும் "ராம்" என்று வைத்துக்கொண்டால் "Inception" படம் ஒரு "பருத்தி வீரன்". 

இரண்டரை மணி நேரப் படத்தில் எந்த ஒரு நொடியை  தவறவிட்டாலும் படம் புரியாது. ஜாலியாக என்ஜாய் பண்ண நினைத்து படத்திற்கு போகாதீர்கள். இரண்டரை மணி நேரமும் அடுத்தடுத்து வேகமாக நகரும் காட்சிகளை நினைவில் வைக்கவேண்டும். கொடுத்த காசுக்கு அதிகமாக தகவல்களை மண்டைக்குள் திணித்தாக வேண்டும். சில அமெரிக்க நண்பர்கள் ஐந்து முறை பார்த்த பின்பும் படத்தில் புரிந்துகொள்ள வேண்டிய நுணுக்கங்கள் மிச்சமிருப்பதாக புலம்புகிறார்கள். அவ்வளவு complex ஆன திரைக்கதை. திருக்குறளை ஒரு தனி நபர் எழுதியிருக்க முடியுமா என்பது தெரியாது, அனால் இந்தப் படத்தை ஒரு தனி நபர் edit செய்திருக்க முடியாது. படம் முடித்து வெளியே வரும்போது நாம் இப்போது இருப்பது நிஜமா அல்லது இரவு படுத்தபின் தெரிவது நிஜமா என்று சந்தேகம் கொள்வீர்கள். ஒரு அறிவியல் புத்தகத்தில் கடைசிப் பக்கங்களை கிழித்துவிட்டது போல் இருக்கும். Pure Sci-Fi movie. 

படத்தில் பேசுவது முழுதாக புரியாது என்று நினைத்தால் தமிழில் பார்ப்பது நல்லது. இதற்க்குக் கீழ் இருக்கும் கதைச் சுருக்கத்தை நீங்கள் படிக்காமல் தவிர்க்கலாம், படம் பார்க்கும் போது சுவாரஸ்யம் இருக்கும். படம் பார்க்கும் எண்ணம் இல்லை என்றால் கீழே தொடர்ந்து படித்துவிட்டு அவ்வெண்ணம் கொள்ளக.

படத்தில் கனவிற்குள் கனவு என்று ஐந்து கனவுகள் ஆழம் போகும். நிஜத்தில் கதாநாயகன் வயர்கள் மூலம் மற்றவர்களை தன்னோடு இணைத்து அவர்களோடு சேர்ந்து ஒரே கனவிற்குள் சென்று காட்சிகளை இயக்கும் அறிவியலை தன் தந்தையிடம் இருந்து கற்றுக்கொண்ட 40 வயது உடைய ஆள். ஒரு தாதாவிற்கு (தாத்தா அல்ல) இன்னொரு 25 வயது தொழிலதிபரை வெல்ல உதவுவான் நம் கதாநாயகன். தொழிலதிபரின் சாகக்கிடக்கும் தந்தையிடம் ஒரு secret passwod -ஐ வாங்கவேண்டும். அந்த 25 வயது தொழிலதிபரின் கனவிற்குள் அவனுக்கே தெரியாமல் சென்று தந்தையிடம் பேசி ரகசியத்தை வாங்கவேண்டும். இது சாதாரணம் அல்ல. கனவு காணும் போது தூக்கம் களையக்கூடாது (அல்லது வேண்டிய நேரத்தில் கலையக் வேண்டும்), கனவில் தொழிலதிபரின் கதாபாத்திரங்களோடு சண்டையிடவேண்டும், சரியாக வழி கண்டுபிடிக்க வேண்டும், என பல சிக்கல் இருக்கிறது. எனவே நம் ஹீரோ ஒரு டீம் சேர்கிறான். ஹீரோ, தன் உதவியாளன், கனவில் நகரை வடிவமைக்க ஒரு பொறியாளர் (ஹீரோயின்), சண்டையிட ஒரு திருடன், தூக்க மருந்து பற்றி அறிந்த ஒரு roadside விஞ்ஞானி, அந்த தாதா. இவர்கள் ஐந்து பெரும் ஏரோபிளேனில் தொழிலதிபரை மடக்கி (மயக்கி) வயர்களை இணைத்து ஆறுபேரும் ஒரே கனவிற்குள் செல்கிறார்கள். அந்த கனவில் இருந்து மறுபடியும் வயர்களை இணைத்து இனொரு கனவிற்குள் செல்வார்கள். இப்படியாக மொத்தம் ஐந்து கனவு. ஏரோபிளேன் தரை இறங்குவதற்குள் ரகசியத்தை பெற்றாக வேண்டும். 

ஆனால் ஒரு வசதி என்னவென்றால், நிஜத்தை விட கனவு 40 மடங்கு வேகமாக நகரும். (it's a science, brain works that much faster while we sleep) அதாவது ஒரு மணிநேரம் தூங்கி கனவில் 40 மணிநேரம் வாழலாம். அதற்குள் வரும் கனவு மேலும் 40 மடங்கு வேகம், அப்படியென்றால் ஐந்தாவது கனவு எவ்வளவு காலம்நேரம் என்று கணக்கிட்டுக்கொளுங்கள்.  எனவே அவர்களுக்கு ரகசியம் பெற போதிய நேரம் உள்ளது. கனவில் யாரேனும் இறந்து போனால் அவர்களை நிஜத்தில் எழுப்ப முடியாது, அவர்கள் infinity நேரக் கனவுக்குள் சென்றுவிடுவார்கள். இன்னொரு சுவாரஸ்யம் என்னவென்றால் இவர்கள் ஒவ்வொருவரின் ஆழ்மனதில் இருக்கும் சில கதாபாத்திரங்கள் எல்லாக் கனவுகளிலும் வந்து வம்பு பண்ணும். உதாரணம் சில வருடகள் முன் இறந்துவிட்ட ஹீராவின் மனைவி, எல்லாக் கனவிலும் பொறியாளரை (ஹீரோயினை) கொலை செய்ய அலைவாள். 

ஒவ்வொரு கனவையும் கலைக்க ஒரே வழி யாரேனும் அவர்களை ஒவ்வொரு தூக்கத்தில் இருந்தும் எழுப்ப வேண்டும். உயரத்தில் இருந்து அவர்களை கீழே தள்ளுவத்தின் மூலமே அது சாத்தியம். இதற்காக ஒவ்வொரு நிலையிலும் ஒரு நபரை விழித்திருக்க வைத்துவிட்டு மற்றவர்கள் இணைந்து அடுத்த கனவு காண்பார்கள். ஆனால் துரதிஷ்ட வசமாக முதல் கனவில் அவர்கள் உறங்கிக்கொண்டு சென்றுகொண்டிருக்கும் கார் பாலத்தின் மேலிருந்து கீழே விழும். இருந்தாலும் கீழே விழும் அந்த நேரத்தில் மூன்றாவது அல்லது நான்காவது கனவில் பல மணிநேரங்கள் களிக்கலாம் (மூளை வேகமாக செயல்படுவதால்). But கார் கீழே விழுவதால் அங்கு ஒரு free fall இருக்கும். எனவே அடுத்த கனவிலும் zero gravity யாக மாறிவிடும். Gravity இல்லாமல் எப்படி அவர்களை கீழ தள்ளி எழுப்ப முடியம்? Complicated. இதை ஹீரோவின் உதவியாளன் அறிவுப் பூர்வமாக கையாள்வான் ஒரு கட்டிடத்தின் lift (elevator) -க்குள் இரண்டாவது கனவில் தூங்கும் நான்கு பேரையும் இழுத்துச் சென்று அதை வேகமாக மேல்நோக்கி செலுத்துவான். 

இவ்வாறு படம் முழுவதும் நுணுக்கங்கள் நிறைத்திருக்கும். நான் முதல் பத்தியில் கேட்ட கேள்விகள் அனைத்தும் படத்தில் எங்காவது நமக்கு நாமே கேட்போம். அவர்களின் கூட்டு முயற்சி (சதி) வெற்றி பெற்றதா என்பது கடைசியில் தெரியும். டைரக்டர் climax இல் வைத்த பன்ச் இருக்கையை விட்டு எழ மனசு வராது. இன்னொரு மூன்று முறை பார்த்தல் தான் என்னால் முழுதாக விமர்சிக்க முடியும்.  

Wednesday, July 21, 2010

குடும்பத்தோடு

எங்கள் வீட்டின் அருகில் இருக்கும் Sam Nobel Museum of Natural History -க்கு சென்றவாரம் சென்றிருந்தேன். வெள்ளிக்கிழமை இரவு 8:30 மணிக்கு 'How to Train your Dragon!' என்ற animation படத்தை பல்கலைக் கழக வளாகத்தில் தங்கியிருக்கும் குடும்பங்களுக்காக மட்டும் திரையிடப்படுவதாக மின்னஞ்சல் அனுப்பியிருந்தனர். மின்பதிவு செய்துவிட்டு இரவு 8 மணிக்கெல்லாம் அருங்காட்சியகதிற்குள் நண்பரும் நானும் சென்றுவிட்டோம். அது திரையரங்கு  அல்ல, ஒரு open hall -இல் LCD projection செய்யப்பட்டது. குழந்தைகளை அழைத்து வந்திருந்த அமெரிக்கர்கள் படுக்கைகளை விரித்திருந்தனர். ஒன்றரை மணி நேரப் படத்திற்கு பிக்னிக் போவது போல் பெட்டி படுக்கைகளோடு அவர்கள் வந்திருந்தது ஆச்சரியமாகவும் சந்தோசமாகவும் இருந்தது. வீட்டில் படம் பார்ப்பது போல் அவ்வளவு relax -ஆக போர்த்திப் படுத்துக்கொண்டனர். நாங்கள் நாற்காலிகளை இழுத்துப் போட்டு அமர்ந்துகொண்டோம். நான் படம் பார்த்ததை விட அந்த குழந்தைகளின் சேட்டைகளைப் பார்த்தது தான் அதிகம். 

எனக்கு மிகவும் பிடித்தது, படம் முடிந்தவுடன் அனைத்துக் குழந்தைகளும் ஒன்றாக கை தட்டிவிட்டுச் சென்றனர். தூங்கிக் கொண்டிருந்த குழந்தைகளை பெற்றோர்கள் எழுப்பி கை தட்ட வைத்தனர். எனக்குக் கூட தோன்றவில்லை. அவர்களைப் பார்த்துத் தான் late -ஆக கை தட்டினேன். 

நம்மைக் காட்டிலும் அமெரிக்கர்கள் குடும்பத்திற்காக செலவிடும் நேரம் அதிகம். ஒரு நாளைக்கு 8 மணி நேரத்திற்கு மேல் வேளை செய்ய மாட்டார்கள். மாலை நேரம் மற்றும் சனி ஞாயிறுகள் முழுவதும் குடும்பத்தோடு வெளியில் சென்றுவிடுவார்கள். இது கலாச்சாரமாகவே ஆகிவிட்டது. 

இன்னொன்றையும் சொல்லியாக வேண்டும். இங்கு ஒவ்வொரு தம்பதிக்கும் மூன்று அல்லது நான்கு குழந்தைகள் இருக்கும். அவர்களுக்குப் பிறந்தவை இரண்டு. முதல் மனைவிக்குப் பிறந்தது ஒன்று, முதல் கணவனுக்குப் பிறந்தது ஒன்று. மொத்தம் நான்கு. இது 80% குடும்பங்களின் நிலை. இதை வெளிப்படையாகவே எல்லோரிடமும் சொல்வார்கள். 

See two photos below.




Saturday, July 17, 2010

முடியல!

நானும் வெகு நாட்களாக அடிக்கடி அந்த வண்டியைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். Health Science Department முன் parking area -வில் சில சமயம் நின்றுகொண்டிருக்கும். அதைக் கடந்து தான் நடந்து போவேன். 'காக்க காக்க' படத்தில் 'என்னைக் கொஞ்சம் மாற்றி' பாடலில் வரும் Jeep போல் இருக்கும்.  ஒரு முறை கூட அந்த வண்டியின் ஒரிஜினல் நிறத்தைப் பார்த்தது இல்லை. ஒழவுக் (உழவுக்) காட்டில் ஓட்டிய டிராக்டர் போல் வண்டி முழுவதும் சேறு அப்பி இருக்கும். மற்ற எல்லா வாகனங்களும் அழகாக மின்னும். சுத்தமான சாலைகளில் ஓடும் இந்த வண்டியில் எப்படி இத்தனை மண் அப்பி இருக்கிறது என்று எனக்கு விளங்கவே இல்லை. "காசு போட்டு வாங்கராணுக, அத கழுவி maintain பண்ண முடியாதா?" என்று கடிந்துகொண்டு போவேன். 

சிலசமயம் அதே Jeep -இல் பின்பக்கத்தில் யூகிக்க முடியாத இயந்திரம் ஒன்று வைக்கப்பட்டிருக்கும். கனத்த இரும்பினாலான அந்த இயந்திரத்தை எந்தப் பக்கம் இருந்து பார்த்தாலும் என்னவென்று கண்டுபிடிக்க முடியாது. "மாவு அரைக்கிற மிசினாக இருக்கும்" என்று சமாதானம் ஆகிக்கொள்வேன்.

அப்பறம் ஒரு முறை cow boy தொப்பியை காக்கா விரட்டுவது போல் குச்சியில் உயரமாக சொருகி வைக்கப்பட்டிருந்தது. எனக்கு வந்த கடுப்புக்கு அளவே இல்லை. வண்டிக்கு சொந்தக்காரனை கண்டுபிடிக்க வேண்டும் போல் இருந்தது. 

இன்னொரு நாள் jeep முழுவதும் கூட்டல் பெருக்கல் குறிகளாக பிளாஸ்திரி ஓட்டப்பட்டிருந்தது. பின்பக்க கம்பிகள் எல்லாம் கட்டுப் போடப்பட்டிருந்தது. "இன்று அருகில் போய் பார்த்துவிட வேண்டும்" என்று முடிவெடுத்துப் போய் பார்த்தேன். அந்த வண்டியின் கண்ணாடியில் பெருசாக ஒரு வாசகம் எழுதப்பட்டிருந்தது. "It's a jeep thing. You never understand". 

அதைப் படித்த கணத்தில் அந்த வண்டிக்கு சொந்தக்காரனை எனக்குப் பிடித்துப் போனது. என்னா கெத்து! அந்த வண்டியின் மீது அவனுக்கு இருந்த காதலை உணர்ந்துகொண்டேன். நல்லா இருக்கும் வண்டியில் சேறு பூசி ஓட்டிக்கொண்டிருக்கும் creativity எனக்குப் பிடித்தது. எத்தனை பேரை திரும்பிப் பார்க்க வைத்திருப்பான். ஒரு முறை சந்தித்தாக வேண்டும். அந்த வண்டியையும் அவனையும் புகைப்படம் எடுக்கத் தேடிக்கொண்டிருக்கிறேன். 

இதைப் போல் இன்னும் சிலர் இருக்கிறார்கள். எங்கள் வேதியியல் துறையில் ஒரு மாணவன் இருக்கிறான், காலில் செருப்பிற்குப் பதிலாக தெர்மாக்கோலை வைத்து பூட்ஸ் போல் பாதத்தின் மேலும் கீழும் cello tape -ஐ சுற்றி ஒட்டிக்கொண்டுதான் வகுபிற்கு வருவான். நடக்கும் போது பாதம் மடங்கி விரிவதற்கு ஏற்ப இரண்டு மூன்று தெர்மோக்கோலை அடுத்தடுத்து வைத்து ஓட்டியிருப்பன். "முடியல" . பங்குனி மாசம் பழநிக்குப் பாதயாத்திரை போவோர் குறிப்பு எடுத்துக்கொள்க. 

இயற்பியல் வி(த்)தை

முன் இடுக்கையில் சொன்ன அதே Orientation Program. இறுதி நாள் கலந்தாய்வில் மதிய உணவைப் பெற்றுக்கொண்டு நாங்கள் 250 புதிய மாணவர்களும் (புதிய அமெரிக்க மாணவர்களும் சேர்ந்துகொண்டனர்) பெரிய அரங்கம் ஒன்றில் நுழைந்தோம். அரைவட்ட அரங்கில் சினிமா தியேட்டர் போல் இறங்கிச் சென்றால் பள்ளத்தில் பெரிய மேடையும் கரும்பலகையும் இருந்தது. pizza -வையும் side dish -களையும் ஏந்திக்கொண்டு முன் வரிசை இருக்கைக்குச் சென்று அமரப் போனேன். அருகில் போகும் போதுதான் கிலி எடுத்தது. ஏதோ Home Alone வீட்டிற்குள் நுழைவது போல இருந்தது. 'அபூர்வ சகோதரர்கள்' படத்தில் அப்பு டெல்லி கணேஷை  கொல்வதற்குப் போட்ட setup மாதிரியே தெரிந்தது. 

மேடையில் கலர் கலராக பலூன்கள் பறந்துகொண்டிருந்தன, அடுப்பு எரிந்துகொண்டிருந்தது, எங்கு பார்த்தாலும் கரண்ட் வயர்களாக கிடந்தன, தேவலோகத்தில் புகைவது போல ஜாடிகள் புகை கக்கிக் கொண்டிருந்தன, முள் செருப்பு, முள் படுக்கை, சோடா பாட்டில், மெழுகுவர்த்தி, சுத்தியல், dumb bell , எலும்புக் கூடு, தவில் (drum) என்று மேடை முழுவதும் சம்பந்தம் இல்லாத பொருட்கள் குவிந்திருந்தன. கொஞ்சம் ஜெர்க் ஆகி நான்கு வரிசைகள் பின்னாடி தள்ளி அமர்ந்து கொண்டேன். 

அனைத்து மாணவர்களும் அரங்கம் நிறைத்து அமர்ந்து பேசிக்கொண்டு உண்டுகொண்டு இருந்தபோது நிகழ்ச்சி தொடங்கியது. காதைக் கிழிக்கும் ஒரு விசில் சத்தம், பால் குக்கரில் வருவதுபோல். பொறை ஏறித் திரும்பிய கணத்தில், மேடையின் பின்பக்கத்தில் இருந்து திரையை கிழித்துக்கொண்டு ஒரு பப்பூன் ராக்கெட் சைக்கிளில் காலை விரித்துக்கொண்டு பாய்ந்து மேடையை ஒரு வட்டமிட்டு வந்து நின்றார். அந்த சைக்கிளில் pedal இல்லை, பதிலாக பின்பக்கம் இரண்டு குட்டி cylinder-கள் ஏவுகணை போல் எதையோ கக்கிக்கொண்டு இருந்தன. அதன் உந்துதலில் தான் அவர் சைக்கிள் பாய்ந்து வந்தது. திரைக்குப் பின் இருந்து அதை ஏவிய இரண்டு மாணவர்கள் ஓடி சைக்கிளை பிடித்து நிறுத்தி புகை கக்கிய ராக்கெட்டை அணைத்தனர். விசில் சத்தம் அடங்கியது. ("இன்னைக்கு சாப்பிட்ட மாதிரிதான்!" என்றது என் mind voice) 

இறங்கியவர் பப்பூன் வேஷத்தைக் கலைத்துவிட்டு, "இவர்கள் என் மாணவர்கள், நான் ஒரு இயற்பியல் விஞ்ஞானி", என்று பெயர் சொல்லி அறிமுகப்படுத்தினார் (பெயர் ஞாபகம் இல்லை). Mr. Bean -ஐ நேரில் பார்த்தது போல் இருந்தது. அனைவரும் சிரித்துக் கைதட்டினர். "I know, you guys don't believe it" என்று சொல்லிவிட்டு ஒரு scientist coat -யும், ரோஸ் கலர் ஐன்ஸ்டீன் விக்கையும், மெல்லிய கையுறையையும் மாட்டிக்கொண்டு  மீண்டும் அறிமுகப்படுத்திக்கொண்டார். எல்லோரும் சாப்பிடுவதை மறந்து விட்டோம். 

ரப்பர் குண்டு ஒன்றை நிலத்தில் அடித்து விளையாடிக்கொண்டே  தமாசாக அறிவியல் முன்னுரை வழங்கி, இந்த வகுப்பில் அறிவியல் மீது உள்ள பயத்தை போக்கப்போவதாகச் சொன்னார். சொல்லி முடிக்கும்போது அந்த ரப்பர் தவறுதலாக புகைந்துகொண்டு இருந்த ஜாடிக்குள் விழுந்தது, அதை எடுத்தவர் பேசிக்கொண்டே வலது பக்கச் சுவற்றில் வீசி அடித்தார். கண்ணாடி பல்பு உடைவதுபோல் தூள் தூளாக நொறுங்கி விழுந்தது. "Did I scare you?" என்று முன் வரிசையில் வலது கோடியில் அமர்ந்திருந்த சீனாக்காரியைக் கேட்டார். "இல்லை" என்று புன்னகைத்தாள். 
Fact : அந்த ஜாடிக்குள் இருந்தது liquid nitrogen (-196o). நம் மூச்சில் கலந்திருக்கும் nitrogen, -196oC இல் தான் திரவமாகக்கூடும். நாங்கள் ஆய்வுக்கூடத்தில் பயன்படுத்தும் மிகக்குறைந்த வெப்பநிலை இதுதான். It's not a toxic or flammable. திறந்து வைத்தால் வெள்ளையாக புகைந்து (ஆவியாகிக்) கொண்டே இருக்கும்.  ஆனால் இந்த வெப்பநிலையில் திரவத்தில் படும் பொருட்கள் உறைந்து இறுகிவிடும். No more flexibility. Liquid nitrogen நம் உடலில் பட்டால் மிகக் குறைந்த வெப்பநிலையால் அணுக்கள் செத்து, தீ சுட்டது போல் ஆகிவிடும். சென்றவாரம் நான் ஒரு விழுப்புண் பெற்றேன். 

அந்த ரப்பர் குண்டை வேண்டுமென்றேதான் ஜாடிக்குள் எறிந்திருக்கிறார். அதன் பின் வாழைப் பழம், நூல்கண்டு, என சில பொருட்களை liq. Nஇல்  முக்கி எடுத்து கண்ணாடி போல் நொறுக்கிக் காட்டினார். அடுத்து ஒரு ரப்பர் பந்தை நனைத்து எடுத்து வலப் பக்கமாக மேடையில் உருட்டிவிட்டார் ஒன்றும் ஆகவில்லை. இறுதியாக தன் விரலை உள்ளே விடப்போவதாகச் சொல்லி, கையுறையோடு விரலை விட்டு சிறிது நேரம் தமாசு பேசிவிட்டு வெளியே எடுத்தார். ஒரு சுத்தியலை எடுத்து தன் ஆள்காட்டி விரலின் மீது ஓங்கி அடித்தார். விரல் தூள் தூளாக நொறுங்கியது. வாய்பிளந்து மௌனம் ஆனோம். மெதுவாக மடக்கி வைத்திருந்த விரலை வெளியே நீட்டினார். நொறுங்கியது வெறும் கையுறை. ("முடியல!").

"இதுமாதிரி பல வித்தை செய்துதான் என் மனைவியை மயக்கிக் கல்யாணம் செய்தேன்" என்று சொல்லிக் கொண்டு ஒரு நீளமான மெழுகுவர்த்தியை கொளுத்தி பறந்து கொண்டிருந்த பலூன்களை ஒவொன்றாக உடைத்தார். Helium வாயு நிறைந்திருந்த பலூன்கள் டப் டப் என்று சாதாரணமாக உடைந்தன . Nitrogen வாயு பலூன்களும் சாதாரணமாக உடைந்தன. Oxygen பலூன் கொஞ்சம் ஆக்ரோசமாக உடைந்தது. கடைசியாக ஒரு பலூன் மட்டும் உடைந்து தீப் பற்றி அணைந்தது. Hydrogen வாயு தீப் பற்றிக்கொள்ளும் என்று விளக்கினார்.

அடுத்து நம்ம ஊர் கருப்பராயன் கோவிலில் இருப்பது போல் ஒர் ஆணிச் செருப்பு. அவர் அணிந்திருந்த Shoe - Socks -களை கழற்றிவிட்டு அந்த செருப்பின் மீது ஏறி நின்றார். கொஞ்சமாக குதித்தார். அப்புறம் ஒரு பெரிய ஆணிப் படுக்கை. அதை மேசை மேல் வைத்து அதில் ஏறிப் படுத்துக்கொண்டு பார்வையாளர்களில் இருந்து ஒரு மாணவியை அழைத்தார். மாணவி கொஞ்சம் குண்டாக இருந்ததால் திருப்பி அனுப்பி நகைச்சுவை செய்துவிட்டு, இன்னொரு மாணவியை அழைத்தார். 50 கிலோ எடை இருக்கக் கூடும். தன் வயிற்றின் மேல் ஏறி நிற்கச் சொன்னார்.  சிறிதும் யோசிக்காமல் நாற்காலி மீது கால் வைத்து, மேசை மீது ஏறி, அவர் வயிற்றின் மீது ஏறி நின்றார் அந்த அமெரிக்க மாணவி. 
Fact : ஆணிச் செருப்பின் மீது நிற்கும் போது நம் எடை நூற்றுக்கணக்கான ஆணி முனைகளின் மீது சமமாகப் பரவுகிறது. Weight on an unit area (ஓர் ஆணி முனை) குறைகிறது. எனவே அது ஒரு அக்குப்பன்ஜர் செருப்பு போல் தான் இருக்கும். வலிக்காது. நம்ம ஊர் பூசாரிகளை ஒரே ஒர் ஆணி மீது ஏறி நிற்கச் சொல்லுங்கள் பார்க்கலாம். நெற்றிக்கண் திறந்து சபித்து விடுவார்கள். 

பின் அதே மாணவியிடம் மூன்று சிமென்ட் கற்களை தன் வயிற்றின் மீது வைக்கச் சொல்லி பெரிய சுத்தியலால் உடைக்கச் சொன்னார்  அம்மணி பயத்தில் கண்ணை மூடிக்கொண்டு கரெக்டாக உடைத்தார்.
Fact : அடுக்கான பொருட்களை வேகமாக அடிக்கும் போது energy அடுத்த பொருளுக்குப் போகும் முன்னர், முதல் பொருள் குறிப்பிடத்தக்க energy -ஐ உடைவதர்காக செலவிட்டுவிடுகிறது. எனவே அடுத்து உள்ள பொருளுக்குப் பாதி சக்தி தான் போய்ச் சேரும். மெதுவாக அதே அளவு energy -ஐ கொடுத்தால் அடுத்த உள்ள பொருளுக்கு energy பரவ போதிய நேரம் கிடைக்கிறது. உதாரணம்: மூன்று அல்லது நான்கு நூல் கயிறுகளை நீளமாக இணைத்து முடிந்துகொள்ளுங்கள். ஒரு முனையை ஜன்னல் கம்பியில் கட்டிவிடுங்கள். இன்னொரு முனையை பிடித்துக் கொஞ்சம் கொஞ்சமாக இழுங்கள் நான்கு நூல்களில் எது அறுந்து போகும்? Equal chance. எது வேண்டுமானாலும் அறுந்து போகலாம். அனால் வெடுக்கென்று வேகமாக இழுத்துப் பாருங்கள். நிச்சயமாக உங்கள் கையின் அருகில் இருக்கும் முதல் கயிறு தான் அறுந்து போகும். "நல்லதம்பி" படத்தில் NSK ஒரு தண்ணீர் குவளைக்கு அடியில் வாழை இலையை வைத்து தண்ணீர் சிந்தாமல் இலையை உருவுவதும் இதே அறிவியல் விதியின் படிதான்

சில கண்ணாடி பாட்டில்களை உடைத்து வாளி ஒன்றிற்குள் போட்டு அதற்குள் வெறும் காலோடு இறங்கி நின்றார். ஆணிச் செருப்புத் தத்துவம் தான்.

இது நடந்து கொண்டிருந்த போதே மேடையின் வலது பக்கத்தில் இருந்து "டமால்" என்று ஒரு பெரிய வெடி வெடித்தது. மூன்று நான்கு தீபாவளி அணுகுண்டுகள் ஒன்றாக வெடித்தது போன்ற சத்தம். அரங்கம் 'கிர்ர்ர்'  என்று vibration -இல் உறுமியது. பாதி மாணவர்கள் பயந்து எழுந்து விட்டனர். விஞ்ஞானி liq. N2 இல் நனைத்து உருட்டிவிட்டிருந்த ரப்பர் பந்து தான் வெடித்தது. 
Fact : Supercooled oxygen is highly explosive, thats why it is used as the rocket fuel. ரப்பர் பந்திற்குள் இருந்த காற்று -196oC க்கு இறங்கி உறைந்து, பின் சூடாகும் போது அதில் இருந்த oxygen வெடித்திருக்கிறது. இது அவர் plan பண்ணி செய்தது தான். 

சத்தத்தில் அரண்டு முதல் வரிசை வலது கோடி சீனாக்காரி coke -ஐ துப்பிவிட்டு நான்கு வரிசை பின்னாடி தள்ளி வந்து அமர்ந்தாள். ("இதத் தான் நாங்க முன்னாடியே செய்தோம்")

விஞ்ஞானி ஒரு தவில் போன்ற drum -ஐ (இசைக் கருவியை)  எடுத்து கழுத்தில் மாட்டிக்கொண்டு வாசித்தார் (தட்டினார்). சின்னதாக நடனம் (போன்ற ஒன்றை) ஆடிவிட்டு, பட்டாசு ஒன்றைக் கொளுத்தினார். அனைவரும் காதைப் பொத்திக்கொண்டனர். ஆனால் அது வெடிக்கவில்லை, பதிலாக ரோஸ் கலரில் புகை கக்கியது. அதை கையில் எடுத்து drum இன் ஒரு பக்கத்தைத் திறந்து உள்ளே போட்டு மூடிவிட்டு பேசிக்கொண்டிருந்தார். அந்த drum -ற்குள் எப்படி காற்று அதிர்கிறது என்பதை விளக்கப் போவதாகச் சொன்னார். புகை நிறைந்த drum -இன் ஒரு பக்கத்தைத் திறந்து, இன்னோரு பக்கத்தைத் தட்டினார். சில வித்தகர்கள் சிகரெட் புகையில் வளையம் விடுவது போல் ஒரு பெரிய ரோஸ் கலர் வளையம் கிளம்பி பத்து வரிசை இருக்கைகளைக் கடந்தும் அழகாக நகர்ந்து சென்றது. அதுவரை பிறந்த நாளுக்குக் கொளுத்தியது போல் மேசை மீது எரிந்துகொண்டிருந்த மேலுக்குவர்த்திகளை பத்து அடி தூரத்தில் இருந்து drum -ஐ தட்டி ரோஸ் கலர் புகை வளையத்தால் அணைத்துக் காட்டினார். கைதட்டாமல் இருக்க முடியவில்லை. 

இரண்டு கைகளிலும் இரண்டு dumb bell -களைத் தூக்கிக் கொண்டு ஒரு நாற்காலியில் அமர்ந்தார். ஒரு மாணவர் நாற்காலியை வேகமாகச் சுற்றி விட்டார். கைகளை விரித்தும் குறுக்கியும் சுழற்சி வேகத்தைக் கட்டுப்படுத்தினார். சுழற்சியின் அச்சுக் கோட்டில் (central axis) எடை கூடினால் சுழற்சி வேகம் கூடும் என்பதை விளக்கினார்.

கீழே உள்ளது போல் அவர் செய்த ஒரு wooden apparatus -இல் ஒரு கோழி முட்டையை வைத்தார். வெடுக்கென்று அந்த நீலக் கட்டையைத் தட்டினார். முட்டை நேராக கீழே விழுந்து அடுத்த குழிக்குள் உடையாமல் நின்றது. ஐந்து முறையும் உடையாமல் குழிக்குள் விழுந்து நின்றது. எடை அதிகமான கட்டை வேகமாகவும் முட்டை தாமதமாகவும் விழுந்ததால் அடுத்த குழிக்குள் முட்டை அமர்ந்தது. 100% vertical fall பற்றியும் விளக்கினார்.

1.jpg

பின் அந்த முட்டையை கையில் வைத்து vertical -லாக அழுத்தி உடைக்கும்படி சவால் விட்டார். இரண்டு மாணவர்கள் முயன்று முடியவில்லை. பின் விஞ்ஞானி அதை வாங்கி "மோதிரத்தை அணிந்துகொண்டு அழுத்தினால் உடைத்துவிடலாம்" என்று comedy -யாக அறிவியல் விளக்கினார். "இதுவரை என் மனைவியால் இதைக் கண்டுபிடிக்க முடியவில்லை, என்னை பலசாலி என்று நம்பிக்கொண்டிருக்கிறாள்" என்றார். 

மொத்தம் ஒன்றரை மணி நேரம் நிற்காமல் இன்னும் பல அறிவியல் ஜாலங்களை செய்துவிட்டு மீண்டும் ராக்கெட்டில் ஏறி மறைந்தார். அவருடைய மாணவர்கள் கொடுத்து வைத்தவர்கள். இது போன்ற ஆசிரியர்களைத் தேட வேண்டியுள்ளது. மக்கு மாணவர்களின் மனத்தைக் கூட உழுது, விதைத்து, விவசாயம் செய்து விடுவர். 

உருண்டையான கல்

சென்ற ஆண்டின் என் வகுப்பறை நிகழ்வு ஒன்றை பகிர்ந்து கொள்கிறேன். Oklahoma பல்கலைக்கழகத்தில் சேர்ந்த முதல் வாரம், அனைத்துத் துறைகளைச் சேர்ந்த புதிய PhD மாணவர்களுக்கும் சேர்ந்து Orientation Program என்னும் துவக்கக் கலந்தாய்வு மூன்று நாட்கள் நடந்தது. நாங்கள் மொத்தம் 150 பேர் 30 -க்கும் மேற்ப்பட்ட நாடுகளில் இருந்து வந்து புதிதாய் சேர்ந்திருந்தோம்*. Teaching Assistant -ஆக பணியாற்றவிருக்கும் எங்களுக்கு அமெரிக்க வகுப்புகளைக் கையாள்வது குறித்து மூன்று நாட்களும் வெவ்வேறு விதமான தகவல்களும் பயிற்சிகளும் வழங்கப்பட்டது. அமெரிக்க இளங்கலை மாணவர்களுக்குப் பாடம் எடுக்கும் போது நாங்கள் தெரிந்துவைத்துக்கொள்ள வேண்டிய Ethics, நாங்கள் சந்திக்கப் போகும் சிக்கல்கள், மாணவர்களை ஊக்குவிக்கும் கலை, வகுப்பில் பேசவேண்டியவை பேசக்கூடாதவை என்று பல தலைப்புகளில் வெவ்வேறு அறைகளில் கலந்தாய்வுகள் நடந்தது. இரண்டாவது நாள் நடந்த "மாணவர்களை ஊக்குவிப்பது" பற்றிய கலந்தாய்வு அறையில் 40 பேர் இருந்தோம். மற்றவர்கள் வேறு அறைகளில் கலந்துகொண்டனர். 

Natural Science -துறையை சார்ந்த விஞ்ஞானி ஒருவர் எங்களுக்குப் பயிற்றுவித்தார். Tennis Ball அளவுள்ள உருண்டையான ஒரு கூலாங்கல்லோடு வகுப்பிற்குள் நுழைந்தார். அந்தப் பொருளைக் காட்டி "இது என்ன?" என்றார். வெவ்வேறு பதில்களோடு "கல்" என்ற பதிலும் ஒலித்தது. கல் என்பதை ஒப்புக்கொண்டவர், அது ஏன் உருண்டையாக இருக்கிறது என்றார். அக்கேள்விக்கு எளிதாக பதில் அளிக்க முடியாது, பல ஆய்வுகள் நிகழ்த்த வேண்டும். வாசிக்கும் உங்களுக்கு ஏதாவது யூகம் இருக்கிறதா? 

1. "ஆறுகளால் அடித்து வரப்பட்டதால் அப்படி இருக்கிறது" என்று ஒரு மாணவர் கை உயர்த்தினார். "பாராட்டுகிறேன். ஆனால் இந்தக் கல் தென் அமெரிக்கக் கண்டத்தில் உள்ள ஒரு நாட்டில் (பெயர் மறந்துவிட்டது) இருந்து எடுக்கப் பட்டது. அந்த இடத்தில் ஆறுகள் இருத்த அடையாளமே இல்லை" என்றார். 

 2. "யாராவது அதை அப்படிச் செதுக்கியிருப்பார்கள்" என்றார் இன்னொரு மாணவர். "நன்றி. ஆனால் இந்தக் கல் 100 Million ஆண்டுகள் பழமையானது  என்று ஆய்வுகள் நிரூபிக்கின்றன. மனிதன் 2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தான் தோன்றினான்" என்றார் பேராசிரியர். அதுவரை அலட்சியமாக இருந்தவர்கள் attention ஆனார்கள். அந்த கல்லின் மீது ஒரு வியப்பும் மரியாதையும் வந்தது. 

3. "எரிமலைக் குழம்பு அதை உருக்கியிருக்கும்" என்று ஒரு மாணவர் சொன்னார். "அந்தப் பகுதியில் எரிமலை இல்லவே இல்லை" என்றார் பேராசிரியர். மேலும் ஆர்வம் அடைந்தோம். 

4. இன்னொருவர் - "கடவுள் அதை அப்படிப் படைத்தார்" . சிரிப்பொலி. 

5. நீண்ட அமைதிக்குப் பின், "அது ஒரு விண்கல்" என்றார் ஒருவர்.  "இது பூமியைச் சேர்ந்த கல்தான் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது" - பேராசிரியர்.

6. எறும்பு ஊரித் தேய்ந்த கல் என்று நான் சொல்லியிருக்கலாம். நம்ம ஊர் பழமொழி அவர்களுக்கு தெரியாது. எனக்கு விளக்கவும் தெரியாது. 

அதற்க்கு மேல் எங்கள் மண்டையில் ஒன்னும் இல்லை என்று தெரிந்துகொண்டு அவரே விடை சொன்னார். "இது ஒரு Dinosaur தவறுதலாக விழுங்கிவிட்டுக் கக்கிய / கழித்த கல். Dinosaur -களின் வயிற்றில் இருக்கும் அமிலம் (stomach acid) மிக concentrated ஆனவை, இந்தக் கல்லைப் பாதி உருக்கி விட்டிருக்கிறது. பொதுவாக reptiles அனைத்திற்கும் strong stomach acid உண்டு, எத்தனை பெரிய ஜீவன்களை விழுங்கினாலும் பாம்பு, முதலை, பல்லி போன்றவை அதை எளிதில் ஜீரணம் செய்துவிடும். இந்தக் கல் எடுக்கப் பட்ட இடத்தின் அருகில் சில Dinosaur களின் எலும்புகளும் கிடைத்தன. இந்தக் கல்லின் காலம் Dinosaur காலத்தோடு ஒத்துப் போகிறது. வேறு எந்த வழியிலும் இந்தக் கல் உருண்டை ஆக வாய்ப்பில்லை" என்று ஆச்சரியப் படுத்தினார். "உங்களுக்காக இதை எடுத்து வந்தேன். மீண்டும் இதை Museum -இல் ஒப்படைக்க வேண்டும்" என்றார். 

"இப்படிதான் ஒரு வகுப்பறையைக் கையாள வேண்டும், மாணவர்களை ஈர்க்க வேண்டும், விடைகளை அவர்களிடம் இருந்து வாங்கவேண்டும்" என்பதாக நீண்டது அந்த கலந்தாய்வு. 

அவர் சொன்ன அந்த "Sam Nobel Museum of Natural History" எங்கள் வீட்டில் இருந்து 100 meter தூரத்தில் தான் இருக்கிறது. அதனாலேயே ஒரு முறை கூட உள்ளே நுழைந்ததில்லை. "நாளைக்காவது குடையை பிடித்துக்கொண்டு ஒரெட்டு போய்வர வேண்டும்" என்று இந்த மடல் தட்டச்சும் போது நினைத்துக்கொள்கிறேன்.. மழைக்காலம். 

உபகுறிப்பு: அந்த 150 புதிய மாணவர்களில் 35% Chinese, 25% Indians, 10% from East Asian Countries, 10% from Gulf Countries, 10% Europeans, 5% Africans, 5% South Americans and Canadians. That program was only for international students. 

பப்பூன் வேஷம் போட்டுக்கொண்டு சைக்கிளில் வகுபிற்க்கு வந்த இயற்பியல் விஞ்ஞானி செய்த வித்தைகள் பற்றி இனொரு நாள் எழுதுகிறேன்

For the reference to the years, see below chat of History of the Earth. 
Geological Clock with events and periods. Ma - a megayear (Million years), Ga - a gigayear (billion years). Earth's (solar system's) age is around 4.5 Ga or 4500 Ma.

Sunday, July 11, 2010

நினைவுகள்

அனேகமாக அனைவருக்கும் நேர்வதுதான். நம் முந்தய கால நினைவுகளை மீட்பதற்கு ("மீட்டுவதற்கு" என்பது சாலப்பொருந்தும்) சில நேரங்களில் கருவி தேவைப்படுகிறது. இசை மீட்டுவது போல.  

நீண்ட நாட்களுக்குப் பிறகு நேற்று R. G. Lakshminarayana -வின் குரலை கேட்க நேர்ந்தது. "ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் உதிக்கின்ற சூரியனும் உறங்குகின்ற வேலை..." என்ற வரி முடிவதற்குள், நிகழ் காலத்தில் இருந்து கழன்று, பின்னோக்கிச் சுழன்று என் இளங்கலைப் பருவத்தில் விழுந்து நின்றேன். நான் எப்பண்பலைக்கும் விசிரியல்ல, ஆனாலும் இக்குரல் என்னை அறியாமலே என் முன்னிரவுகளை நிறைத்திருக்கிறது. இளங்கலைப் பருவத்தில் நான் தங்கியிருந்த அறை, வெள்ளி இரவுதோறும் கோவையிலிருந்து நான் ஊர்திரும்பும் இரவுப் பேருந்து, கடைசி புரோட்டாவும் தீர்ந்து நாற்காலிகளை மேசைமீது கவிழ்க்கும் உணவகக் காட்சி எனப் பல முன்னிரவுகள் என் நினைவில் பிம்பமாகி மறைகிறது. அந்தக் குரலின் வசீகரத்தைத் தாண்டி, அது தினமும் குறிப்பிட்ட நேரத்தில் எங்கிருந்தேனும் பின்னிசையாக ஒலித்ததே காரணம். 

சில பாடல்களும் நம்மை குறிப்பிட்ட காலத்திற்கு இழுத்துச் செல்லும். Boys, லேசா லேசா, காக்க காக்க படப் பாடல்கள் என் இளங்கலைக் காலத்தோடு பிணைந்தவை. "மன்மத ராசா" கேட்க்கும் போதெலாம் CASCAL - GRD அரங்க அதிர்வு தொற்றும். ஒலி மட்டுமல்ல வாசம், வானிலை, தோற்றம், சுவை, கையெழுத்து என்று பல கருவிகள் நம் இறந்த காலத்தைச் சிறைபிடித்து வைத்திருக்கின்றன. அவற்றைத் தொடும் போதெலாம் நினைவுகள் விரிகின்றன. 

இதை எண்ணிப்பார்த்து நான் இப்போதெல்லாம் volunteer -ஆக என் காலத்தோடு சில வாத்தியங்களைச் சேர்கிறேன். உதாரணமாக ஒவ்வொரு இடத்தில் நான் வசிக்கும்போதும் என் mobile phone ringtone -ஐ மாற்றிக்கொள்கிறேன். "Rang de basandi"  ringtone கேட்கும்போது நான் சென்னையில் வசித்த ஞாபகம் வரும். இடத்திற்கு, காலத்திற்கு தகுந்தவாறு என் கணினி திறக்கும் இசை, Desktop Background, என் perfume என்று சிலவற்றை volunteer -ஆக மாற்றுவதுண்டு. இவற்றை என்றேனும் எதிர்காலத்தில் கடக்க நேரும்போது இக்கால நினைவு தோன்றும். 

ஐவகை நிலங்களுக்கு ஏற்ப ஐவகை பண், மலர், கடவுள் என கருப்பொருள் உரிப்பொருள் கொண்டதன் அவசியம் புரிகிறது. 

தவிர்க்க நினைக்கும் சில நினைவுகளைத் தூண்டும் கருவிகளும் சேர்ந்துகொள்கின்றன. ஆளவந்தானில் நந்து காசை சுண்டினால் கடுப்பாவதைப் போல எல்லோருக்கும் சிலது வாய்த்துவிடுகின்றது. 

நீங்களும் உங்கள் time machine-கள் பற்றி எழுதலாம். 

Frozen Moments

April 27,2010
Norman

To Chandra Mohan anna,

Oklahoma was a hot spot receiving frequent tornado in the past. So they installed tornado alarms 15 years back on every street in every 50 feet. Also in every room of our apartment and every building we have tornado alarms. We are advised to get into bath tubs and cover with a mattress when we hear intense beep sound from the alarm. All the radios will repeatedly announce the direction and strength of tornado once it happens. Until the radio announces every thing is okay, we should not come out from the tub. There are some brave teams called "Tornado Watchers", whose job is to follow the tornado by car and inform the direction to radio stations. 

In past 15 years there were no tornado in Oklahoma, but still the alarms are working well and the maintenance guys check them every month first Friday. 

Oklahoma is also special for unpredictable weather. I saw, for example, heavy rain last night, 35 degree C this morning, freezing wind in the afternoon and snow fall tonight. Weather changes withing hours. So we should always keep our eyes on weather forecasts. We have emergency telephone posts (like small lamp post) in every 50 feet on streets with blue fluorescent light. Everybody knows that pressing tthe red button in the post will link us to OUPD (Oklahoma University Police Department). 

Frozen Moments

Last December, you might have seen news in Tamil Channels and The Hindu news paper about the Christmas Storm in Oklahoma. It was a day before Christmas, a heavy and sudden snow fall occurred for 20 inches and broke the record of a snow fall in 1940s. That day morning, it was so clam. One of my friends was suppose to catch a flight to India. So Robinson, and other 3 Tamil friends casually started from here Norman by a car to the Airport in Oklahoma City, half an hour distance. I avoided the trip since the car has no room for me.

When they reached Airport, snow fall started and all the flights were cancelled. They laughed at it and went to an Indian restaurant before returning to home. When they started from the restaurant, it turned heavy snow fall with unimaginable freezing and speedy wind. Thiru, who was driving his $4000 car that he bought a week before, was unable to control the car on the slippery ice road.  When he was on a 30 feet hight road without safety walls, hit another car on its back and let the front feel of his car slipped down the road. There were 30 feet down slopes on both sides of the road. He couldn't pull the wheel back, since the ice unfavored the reverse motion. So they were simply sitting inside the car until getting a help. 

But suddenly a third car hit their car from back. Since no diver could see beyond 3 feet, one after another, cars were continuously hitting and blocked the whole road. My friends got sacred and got down from their car and was standing down hills beside the road. There were more then ten cars on the road. It was snow fall and freezing storm. They neither had a jacket nor a building nearby in the deserted area. They used all their energies to keep themselves warm for 10 minutes. But the fast flying ice crystals hurt them severely. For another ten minutes they were just alive and can't even move, almost frozen. The snow on surface rose to their knee level. Suddenly a huge truck with all its power and speed hit all the ten cars and pushed them down from the road. The truck did not stop to hear anybody's scream. Then our friends changed their place before another truck roll the cars on them. When they call 911 emergency number, they replied "we got more than 100 calls from different places, please manage the situation by yourself, and call us back only if there is any problem of losing life". 

Finally an American who was familiar with this calamity helped my friends by giving his car for shelter. And after 4 hours people from all the cars grouped to clear the situation. My fiends came home alive around 9 at the night with the car hanging in a crane. Thiru had to spend $2000 to repair his car.

Nature never bother us, if we don't bother it.

Saravanan Ramasamy 

Kishore's Blog

April 29, 2010
Norman


To my PSG friends,


Hi all,
140, Dr.Jaganathan Nagar, Civil Aerodrome Post, Coimbatore -14 was the address Kishore and I were living during our college days. Most of our friends, who visited our house, might still remember there were a shelf full of general books, Anandha Vikadan, Junior Vikadan, The Hidnu, etc. A radio, an old ceiling fan, a calendar which always showed previous month, a damaged wall clock, our paintings too. We also shared our room with spiders, termites, ants, house lizards, and many unnamed species which could be found only in our room and Amazon forest. Those days were the pleasant part of our life. We read all kinds of books, for example Sathiya Sothanai of Gandhiji to Mein Kampf of Hitler. Really we had both of the books on our shelf. 

Kishore and I would discuss all genre like science, literature, politics, news, history, philosophy, cinema, etc. Especially after dinner at Udhayam mess every night we used to go for walk around the street. Ganesh and Loganathan joined us many days. We had a lot to share while walking. Kishore always puts his views on society, and raises so many "why?"s. He observes all levels of lives and implies his thoughts either while talking or writing. We also did go to CIT campus after a cup of tea at Krishna Bakes at the the time of sunset to refresh our mind. The scene of walking on yellow flowers on CIT roads are still in my memory. I found Kishore as a person who knew something about all whatever I started to speak. It showed he was interest on vast things. 

Almost all of our class boys visited our room for group study. But the first thing everyone did when they entered was looking for Anandha Vikadan. It updated many fields to us. I stopped reading A.V after I came US. I don't know how many of you read still, but Kishore doesn't miss a week. 

I read his blogs and give technical comments every time. He writes something versatile and also combines that with real life. I wish him to continue blogging. I could realize the effort he puts on it, and I don't want that to be wasted. You need to move on, Kishore. Sometimes we could not expect all the posts go excellent, the thing is to write persistently. We need to stand by from 15th to 35th over to win an ODI match. Instead of trying to hit all the overs to boundaries, a batsman should know to defend and move on the middle overs. So do write constantly and move it. Despite of writing on single track, try different things using different writing formats. 

In our college days we received more letters than the house owner received. I used to write on "inland covers" to my friends every week. It was a fun and joy to write letter even telephones were there. I know some of my friends still preserve my inland letters, because writing often does much things than speaking. I strongly believe writing is not just to pass information. It has its own power. So I encourage every one to write. 

In the beginning our writing should fit for the audience (readers), later on the audience will fit/adapt to our writings. I suggest this to Kishore. வள்ளுவன் வாழ்ந்த காலத்தில் திருக்குறளுக்கு ஏதாவது பொற்கிளியோ அல்லது குறைந்தது வெள்ளிக் காசோ கிடைத்ததா என்று தெரியாது. ஆனால் இன்று அதை உலகினுக்கே தந்து வான்புகழ் கொள்கிறது தமிழ் நாடு. குண்டடத்தில் எங்கள் வீட்டு சுவற்றில் மூன்று புகைப்படங்கள் மட்டுமே இருக்கும். ஒரு புலவன், ஒரு கவிஞன், ஒரு தலைவன். (வள்ளுவன், பாரதி, பெரியார்). 2000 ஆண்டுகளுக்குப் பின்னும் எழுத்து வாழ்வதற்கு சாட்சி திருக்குறள். You will have your audience soon, Kishore.

You continue writing on all the fields that you know. My dad often says in my childhood, "உலகத்தில் எதன் மீதும் கருத்து சொல்லும் உரிமையை பெற்றுக்கொள்". My dad introduced me many fields in my young age. He was a reporter in Dinamalar for 15 years. He wriote in several columns in the Daily. Before he posted his report or article to the newspaper, he used to read that aloud  to me and my brother. I got interest on many things because of him. He often took us to the farm on the back side of our house. Those were pleasant walks when he shared all things with us. We would meet a pukka  farmer there (தெம்பர தோட்டத்து ஐயன்) and sit on a stone bench with him, he did not cross his primary schooling, but has great knowledge. My father and he used to chat many things. As a kid I didn't know what he was engraving on the stone bench every day while we visited there. After long days he finished that and I found that was a திருக்குறள், "இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நானா நன்னயஞ் செய்து விடல்". Today I surprise how did an almost illiterate former have inspiration to engrave a Thirukkural on a hard black stone bench by himself in a deserted farm. I admire of his knowledge on vast fields. When my dad asked, "where is the kural number?", he engraved that too later. I was about 6 years at the time. From where I got the practice of writing Thirukkural with its number, which you did see on our classroom black boards. 

Link to Kishore's blog: http://ttsab.blogspot.com/2010/07/week-5.html 


SR

Friendly

May 18, 2010
Norman
24 C


To my college friends,


Hi,



My final exams are over. Since summer holiday started, all UG students vacated their hostel and left the campus deserted. We have research work in lab, so challenging the hottest months here. 

How is life over there? Update me. 

வங்கக் கடலில் ஏற்ப்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுப்பெற்று "லைலா" புயலாக உருவெடுக்கும் என்பதால் இன்னும் சில தினங்களுக்கு ரமணனை செய்திகளில் காணலாம்