Thursday, July 1, 2010

Schindler's List


Let me share about my all time favorite movie. If possible every one should watch this at least once.

Movie Name: Schindler's List


1990 ஆம் ஆண்டு Jurassic Park படத்தை இயக்கி உலகை வியப்பில் ஆழ்த்திய Steven Spielberg , தன் மேல் படிந்த commercial director என்ற பிம்பத்தை தகர்த்தெறிய எடுத்த படம் Schindler's List. 1993 ஆம் ஆண்டு கருப்பு வெள்ளையில் (how bold!) தயாரிக்கப்பட்ட இப்படம் இன்றுவரை அனைவராலும் வியந்து பார்க்கப்படும் காவியம். இது ஒரு உண்மைக் கதை. 1939 ஆம் ஆண்டு, இரண்டாம் உலகப்போர் தொடங்குகிறது. ஹிட்லரின் படை ஜெர்மனியில் ஒரு நகரில் வாழும் யூதர்களை மொத்தமாக இடம் பெயர்கிறது. அவர்களுக்கென தனி இடம் ஒதுக்கப்பட்டதாக கூறி நாஜி படை வலுக்கட்டாயமாக யூதர்களை நகரில் இருந்து வெளியேற்றுகிறது. ஆனால் அனைவருக்கும் தெரியும் அவர்கள் கொள்ளபடபோகிரார்கள் என்று.

தாங்கள் வாழ்த்த வீட்டை விட்டு கையில் முடிதவற்றை மட்டும் தூகிகொண்டு கூடம் கூடமாக யூதர்கள் வெளியேறுகிறார்கள். வேலை செய்ய திறன் அற்ற முதியவர்கள், நோயாளிகள், சிறுவர்கள் அனைவரையும் கொல்கிறது நாஜி படை. Oscar Schindler என்ற unsuccessful German businessman யூதர்களை காப்பாற்ற நினைக்கிறார். தன்னிடம் இருக்கும் பணத்தை எல்லாம் கொண்டு நாஜி படைக்கு தேவையான சமையல் பாத்திரங்கள் உற்பதியாலை ஒன்றை தொடங்குகிறார். அதில் வேலை செய்ய யூதர்களை கேட்கிறார். நாஜி படை அதிகாரிகள் மறுக்கிறார்கள். அவர்களை லஞ்சம் கொடுத்து சம்மதிக்கவைகிறார் Schindler. கூடமாக வெளியேறும் யூதர்களை நிறுத்தி கொள்ளபடுவார்கள் என்று கருதிய முதியவர்களை எல்லாம் essential worker என்று பொய்சொல்லி தன் ஆலையில் வேலைக்கு வைக்கிறார். ஆனாலும் அவபோது நாஜி படை அந்த தொழிலாளிகளை வேட்டையடிக்கொண்டே இருக்கிறது. ஒரு முறை ராணுவ அதிகாரிக்கும் Schindler க்கும் சண்டை ஏற்பட்டு, ராணுவ அதிகாரி அணைத்து யூத தொழிலாளிகளையும் கொல்வதர்காக அழைத்து செல்கிறான். Schindler என்ன செய்வது என்று தெரியாமல் மேல் அதிகாரிகளை லஞ்சம் கொடுத்து அதை தடுத்து நிறுத்த செய்கிறார். மேல் அதிகாரி "உங்களுக்கு வேண்டிய தொழிலாளிகள் பெயர்களை மட்டும் பட்டியலிட்டு தாருங்கள், அவர்களை திருப்பி அனுப்புகிறோம்" என்று சொல்கிறார். Schindler ரும் அவரது உதவியாளரும் ஒரு ஒரு இரவு முழுவதும் அமர்ந்து தங்களுக்கு ஞாபகம் வந்த அணைத்து தொழிலாளர்கள் பெயரையும் பட்டியலிடுகிறார்கள் (Schindler's list). The list crosses 1000. அவர்களை மட்டும் திருப்பி அனுப்புகிறது நாஜி படை.

கடைசியாக உலக யுத்தத்தில் ஜெர்மனி தொற்ற்விட்டதாக வானொலியில் அறிவிக்கப்படுகிறது. தொழிலாளர்கள் மத்தியில் Schindler உரையாற்றுகிறார். "ஜெர்மன் தோற்றுவிட்டது. நாளை காலை நானும் பெர்லின் சென்று சரணடைய உத்தரவு வந்துள்ளது. நான் ஒரு ஜெர்மானியன் உங்களை அடிமைகளாக வேலைக்கு வைத்திருந்ததாக என்மேல் புகார். நான் தூக்கில் இடபட்டாலும் ஆச்சரியம் இல்லை. அனால் என்னால் முடிந்த வரை உங்களை காப்பாற்றி விட்டேன். அதுவே எனக்கு மகிழ்ச்சி."

கருப்பு வெள்ளை படம் வண்ணத்திற்கு மாறுகிறது. Schindler ரால் காப்பாற்றப் பட்ட இன்றும் உயிருடன் இருக்கும் யூதர்கள், அவர்களுடைய வாரிசுகள் (real people, not actors), Schindler ரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார்கள் (year 1993) . படம் முடிவடைகிறது.

சிறந்த காட்சிகள்

  1. நகரை காலி செய்யும் போது பணக்காரர்களாக வாழ்ந்த யூதர்கள் தெருவில் பிசைகார்களாய் நடக்கிறார்கள். ஜேர்மனிய சிறுவர்கள் அவர்களை கல்லால் அடித்து "good bye jews" என்று சிரிக்கிறார்கள்.
  2. அந்த கூடத்தில் இருந்து தப்பி ஓடி பிழைக்க நினைக்கும் யூதர்களை நாஜி படை கண்டுபிடிக்கும் விதம் யாரும் எதிர்பர்காதது. உதாரணம் வீட்டுக்குள், சுவற்றுக்குள், தரையில் குழி தோண்டி ஒளிந்திருக்கும் யூதர்களை, நாஜி படை சுவற்றிலும் தரையிலும் stethoscope வைத்து அவர்கள் மூச்சுவிடும் அதிர்வை கண்டுபிடித்து அவர்களை கொல்லும்.
  3. ஒரு ஜேர்மனிய சிறுவன் தன்னுடைய தோழியான யூத சிறுமியையும் அவளுடைய தாயையும் காப்பாற்ற ராணுவத்திடம் "I searched this side, no one is here" என்று பொய் சொல்லும் காட்சி.
  4. நூற்றுக்கும் அதிகமான ஆண் பெண்களை நிர்வாணமாக நிறுத்தி மருத்துவ பரிசோதனை செய்யும் காட்சி (surprised this type of scenes are not censored. Many scenes have nudity on camera)
  5. ஒரு வயதான யூத தொழிலாளியை சரியாக வேலை செய்யவில்லை என்று அழைத்து சென்று தலைக்கு நேர் துப்பாக்கி வைத்து ராணுவ அதிகாரி சுடுவார். தோட்டாக்கள் இருந்தும் ஒரு முறை கூட துப்பாக்கி சுடாது. அந்த தொழிலாளி திரும்பி சொல்லுவான் "from the sound it seems the gun is not calibrated correctly. it has a fault in the pistol part" ராணுவ அதிகாரி துப்பாகியால் அவன் தலையில் அடித்துவிட்டு கொல்லாமல் சென்றுவிடுவான். (I like this scene very much)
  6. ஒவ்வரு முறையும் schindler தன் தொழிலாளிகளை காப்பாற்ற ராணுவ அதிகாரிகளிக்கு லஞ்சம் கொடுப்பது.
  7. கூடமாக பெண்களை நிர்வாணமாக ஒரு பெரிய அறைக்குள் குளிப்பதற்காக தள்ளுவார்கள் . மேலே உள்ள shower ரில் விச வாயு வரப்போகிறது என எதிர்பார்த்து நடுங்கும் பெண்கள், அதில் இருந்து தண்ணீர் வந்ததும் அழுதுகொண்டே சிரிக்கும் காட்சி.
  8. இரண்டாம் உலக போரின் போது ஜெர்மனில் வாழ்ந்த அனுபவம் வரும். நம் தமிழ் ஈழ யுத்தம் நினைவுக்கு வரும். அதனை காட்சிகளும் மிகை படுத்தப் படாமலும் கச்சிதமாகவும் பொருந்தும்.
  9. Schindler ரையும் , Director Steven Spielberg ஐயும் வணங்கத் தோன்றும்.


If you watch the clips in youtube you will understand the real effort and how classically the film was taken in black and white, in 1993 after giving a colorful and trendy Jurassic Park in 1990.

- Review by Saravanan Ramasamy.

1 comment:

  1. என்ன திடீர்னு ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட்?
    ஸ்பீல்பர்க் கெட்டிக்காரர்தான். ஏலியனை வித்துக்கூட காசு பண்ணுவார்.
    உங்க திரை-பார்வையை ரசித்தேன்!

    ReplyDelete