Saturday, July 17, 2010

முடியல!

நானும் வெகு நாட்களாக அடிக்கடி அந்த வண்டியைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். Health Science Department முன் parking area -வில் சில சமயம் நின்றுகொண்டிருக்கும். அதைக் கடந்து தான் நடந்து போவேன். 'காக்க காக்க' படத்தில் 'என்னைக் கொஞ்சம் மாற்றி' பாடலில் வரும் Jeep போல் இருக்கும்.  ஒரு முறை கூட அந்த வண்டியின் ஒரிஜினல் நிறத்தைப் பார்த்தது இல்லை. ஒழவுக் (உழவுக்) காட்டில் ஓட்டிய டிராக்டர் போல் வண்டி முழுவதும் சேறு அப்பி இருக்கும். மற்ற எல்லா வாகனங்களும் அழகாக மின்னும். சுத்தமான சாலைகளில் ஓடும் இந்த வண்டியில் எப்படி இத்தனை மண் அப்பி இருக்கிறது என்று எனக்கு விளங்கவே இல்லை. "காசு போட்டு வாங்கராணுக, அத கழுவி maintain பண்ண முடியாதா?" என்று கடிந்துகொண்டு போவேன். 

சிலசமயம் அதே Jeep -இல் பின்பக்கத்தில் யூகிக்க முடியாத இயந்திரம் ஒன்று வைக்கப்பட்டிருக்கும். கனத்த இரும்பினாலான அந்த இயந்திரத்தை எந்தப் பக்கம் இருந்து பார்த்தாலும் என்னவென்று கண்டுபிடிக்க முடியாது. "மாவு அரைக்கிற மிசினாக இருக்கும்" என்று சமாதானம் ஆகிக்கொள்வேன்.

அப்பறம் ஒரு முறை cow boy தொப்பியை காக்கா விரட்டுவது போல் குச்சியில் உயரமாக சொருகி வைக்கப்பட்டிருந்தது. எனக்கு வந்த கடுப்புக்கு அளவே இல்லை. வண்டிக்கு சொந்தக்காரனை கண்டுபிடிக்க வேண்டும் போல் இருந்தது. 

இன்னொரு நாள் jeep முழுவதும் கூட்டல் பெருக்கல் குறிகளாக பிளாஸ்திரி ஓட்டப்பட்டிருந்தது. பின்பக்க கம்பிகள் எல்லாம் கட்டுப் போடப்பட்டிருந்தது. "இன்று அருகில் போய் பார்த்துவிட வேண்டும்" என்று முடிவெடுத்துப் போய் பார்த்தேன். அந்த வண்டியின் கண்ணாடியில் பெருசாக ஒரு வாசகம் எழுதப்பட்டிருந்தது. "It's a jeep thing. You never understand". 

அதைப் படித்த கணத்தில் அந்த வண்டிக்கு சொந்தக்காரனை எனக்குப் பிடித்துப் போனது. என்னா கெத்து! அந்த வண்டியின் மீது அவனுக்கு இருந்த காதலை உணர்ந்துகொண்டேன். நல்லா இருக்கும் வண்டியில் சேறு பூசி ஓட்டிக்கொண்டிருக்கும் creativity எனக்குப் பிடித்தது. எத்தனை பேரை திரும்பிப் பார்க்க வைத்திருப்பான். ஒரு முறை சந்தித்தாக வேண்டும். அந்த வண்டியையும் அவனையும் புகைப்படம் எடுக்கத் தேடிக்கொண்டிருக்கிறேன். 

இதைப் போல் இன்னும் சிலர் இருக்கிறார்கள். எங்கள் வேதியியல் துறையில் ஒரு மாணவன் இருக்கிறான், காலில் செருப்பிற்குப் பதிலாக தெர்மாக்கோலை வைத்து பூட்ஸ் போல் பாதத்தின் மேலும் கீழும் cello tape -ஐ சுற்றி ஒட்டிக்கொண்டுதான் வகுபிற்கு வருவான். நடக்கும் போது பாதம் மடங்கி விரிவதற்கு ஏற்ப இரண்டு மூன்று தெர்மோக்கோலை அடுத்தடுத்து வைத்து ஓட்டியிருப்பன். "முடியல" . பங்குனி மாசம் பழநிக்குப் பாதயாத்திரை போவோர் குறிப்பு எடுத்துக்கொள்க. 

1 comment: