Wednesday, July 21, 2010

குடும்பத்தோடு

எங்கள் வீட்டின் அருகில் இருக்கும் Sam Nobel Museum of Natural History -க்கு சென்றவாரம் சென்றிருந்தேன். வெள்ளிக்கிழமை இரவு 8:30 மணிக்கு 'How to Train your Dragon!' என்ற animation படத்தை பல்கலைக் கழக வளாகத்தில் தங்கியிருக்கும் குடும்பங்களுக்காக மட்டும் திரையிடப்படுவதாக மின்னஞ்சல் அனுப்பியிருந்தனர். மின்பதிவு செய்துவிட்டு இரவு 8 மணிக்கெல்லாம் அருங்காட்சியகதிற்குள் நண்பரும் நானும் சென்றுவிட்டோம். அது திரையரங்கு  அல்ல, ஒரு open hall -இல் LCD projection செய்யப்பட்டது. குழந்தைகளை அழைத்து வந்திருந்த அமெரிக்கர்கள் படுக்கைகளை விரித்திருந்தனர். ஒன்றரை மணி நேரப் படத்திற்கு பிக்னிக் போவது போல் பெட்டி படுக்கைகளோடு அவர்கள் வந்திருந்தது ஆச்சரியமாகவும் சந்தோசமாகவும் இருந்தது. வீட்டில் படம் பார்ப்பது போல் அவ்வளவு relax -ஆக போர்த்திப் படுத்துக்கொண்டனர். நாங்கள் நாற்காலிகளை இழுத்துப் போட்டு அமர்ந்துகொண்டோம். நான் படம் பார்த்ததை விட அந்த குழந்தைகளின் சேட்டைகளைப் பார்த்தது தான் அதிகம். 

எனக்கு மிகவும் பிடித்தது, படம் முடிந்தவுடன் அனைத்துக் குழந்தைகளும் ஒன்றாக கை தட்டிவிட்டுச் சென்றனர். தூங்கிக் கொண்டிருந்த குழந்தைகளை பெற்றோர்கள் எழுப்பி கை தட்ட வைத்தனர். எனக்குக் கூட தோன்றவில்லை. அவர்களைப் பார்த்துத் தான் late -ஆக கை தட்டினேன். 

நம்மைக் காட்டிலும் அமெரிக்கர்கள் குடும்பத்திற்காக செலவிடும் நேரம் அதிகம். ஒரு நாளைக்கு 8 மணி நேரத்திற்கு மேல் வேளை செய்ய மாட்டார்கள். மாலை நேரம் மற்றும் சனி ஞாயிறுகள் முழுவதும் குடும்பத்தோடு வெளியில் சென்றுவிடுவார்கள். இது கலாச்சாரமாகவே ஆகிவிட்டது. 

இன்னொன்றையும் சொல்லியாக வேண்டும். இங்கு ஒவ்வொரு தம்பதிக்கும் மூன்று அல்லது நான்கு குழந்தைகள் இருக்கும். அவர்களுக்குப் பிறந்தவை இரண்டு. முதல் மனைவிக்குப் பிறந்தது ஒன்று, முதல் கணவனுக்குப் பிறந்தது ஒன்று. மொத்தம் நான்கு. இது 80% குடும்பங்களின் நிலை. இதை வெளிப்படையாகவே எல்லோரிடமும் சொல்வார்கள். 

See two photos below.




No comments:

Post a Comment