இந்த கேள்விகள் அனைத்திற்கும் விடை சொல்லும் படம் அல்ல Inception. இந்த கேள்விகளைப் பற்றி மேலும் யோசிக்க வைக்கும் படம் அது. Director Christoper Nolan -க்கு இது ஏழாவது படம் . புகழ் பெற்ற "Batman Begins" மற்றும் "The Dark Night (Latest Batman movie) " ஆகிய இரண்டும் "மௌனம் பேசியதே" மற்றும் "ராம்" என்று வைத்துக்கொண்டால் "Inception" படம் ஒரு "பருத்தி வீரன்".
இரண்டரை மணி நேரப் படத்தில் எந்த ஒரு நொடியை தவறவிட்டாலும் படம் புரியாது. ஜாலியாக என்ஜாய் பண்ண நினைத்து படத்திற்கு போகாதீர்கள். இரண்டரை மணி நேரமும் அடுத்தடுத்து வேகமாக நகரும் காட்சிகளை நினைவில் வைக்கவேண்டும். கொடுத்த காசுக்கு அதிகமாக தகவல்களை மண்டைக்குள் திணித்தாக வேண்டும். சில அமெரிக்க நண்பர்கள் ஐந்து முறை பார்த்த பின்பும் படத்தில் புரிந்துகொள்ள வேண்டிய நுணுக்கங்கள் மிச்சமிருப்பதாக புலம்புகிறார்கள். அவ்வளவு complex ஆன திரைக்கதை. திருக்குறளை ஒரு தனி நபர் எழுதியிருக்க முடியுமா என்பது தெரியாது, அனால் இந்தப் படத்தை ஒரு தனி நபர் edit செய்திருக்க முடியாது. படம் முடித்து வெளியே வரும்போது நாம் இப்போது இருப்பது நிஜமா அல்லது இரவு படுத்தபின் தெரிவது நிஜமா என்று சந்தேகம் கொள்வீர்கள். ஒரு அறிவியல் புத்தகத்தில் கடைசிப் பக்கங்களை கிழித்துவிட்டது போல் இருக்கும். Pure Sci-Fi movie.
படத்தில் பேசுவது முழுதாக புரியாது என்று நினைத்தால் தமிழில் பார்ப்பது நல்லது. இதற்க்குக் கீழ் இருக்கும் கதைச் சுருக்கத்தை நீங்கள் படிக்காமல் தவிர்க்கலாம், படம் பார்க்கும் போது சுவாரஸ்யம் இருக்கும். படம் பார்க்கும் எண்ணம் இல்லை என்றால் கீழே தொடர்ந்து படித்துவிட்டு அவ்வெண்ணம் கொள்ளக.
படத்தில் கனவிற்குள் கனவு என்று ஐந்து கனவுகள் ஆழம் போகும். நிஜத்தில் கதாநாயகன் வயர்கள் மூலம் மற்றவர்களை தன்னோடு இணைத்து அவர்களோடு சேர்ந்து ஒரே கனவிற்குள் சென்று காட்சிகளை இயக்கும் அறிவியலை தன் தந்தையிடம் இருந்து கற்றுக்கொண்ட 40 வயது உடைய ஆள். ஒரு தாதாவிற்கு (தாத்தா அல்ல) இன்னொரு 25 வயது தொழிலதிபரை வெல்ல உதவுவான் நம் கதாநாயகன். தொழிலதிபரின் சாகக்கிடக்கும் தந்தையிடம் ஒரு secret passwod -ஐ வாங்கவேண்டும். அந்த 25 வயது தொழிலதிபரின் கனவிற்குள் அவனுக்கே தெரியாமல் சென்று தந்தையிடம் பேசி ரகசியத்தை வாங்கவேண்டும். இது சாதாரணம் அல்ல. கனவு காணும் போது தூக்கம் களையக்கூடாது (அல்லது வேண்டிய நேரத்தில் கலையக் வேண்டும்), கனவில் தொழிலதிபரின் கதாபாத்திரங்களோடு சண்டையிடவேண்டும், சரியாக வழி கண்டுபிடிக்க வேண்டும், என பல சிக்கல் இருக்கிறது. எனவே நம் ஹீரோ ஒரு டீம் சேர்கிறான். ஹீரோ, தன் உதவியாளன், கனவில் நகரை வடிவமைக்க ஒரு பொறியாளர் (ஹீரோயின்), சண்டையிட ஒரு திருடன், தூக்க மருந்து பற்றி அறிந்த ஒரு roadside விஞ்ஞானி, அந்த தாதா. இவர்கள் ஐந்து பெரும் ஏரோபிளேனில் தொழிலதிபரை மடக்கி (மயக்கி) வயர்களை இணைத்து ஆறுபேரும் ஒரே கனவிற்குள் செல்கிறார்கள். அந்த கனவில் இருந்து மறுபடியும் வயர்களை இணைத்து இனொரு கனவிற்குள் செல்வார்கள். இப்படியாக மொத்தம் ஐந்து கனவு. ஏரோபிளேன் தரை இறங்குவதற்குள் ரகசியத்தை பெற்றாக வேண்டும்.
ஆனால் ஒரு வசதி என்னவென்றால், நிஜத்தை விட கனவு 40 மடங்கு வேகமாக நகரும். (it's a science, brain works that much faster while we sleep) அதாவது ஒரு மணிநேரம் தூங்கி கனவில் 40 மணிநேரம் வாழலாம். அதற்குள் வரும் கனவு மேலும் 40 மடங்கு வேகம், அப்படியென்றால் ஐந்தாவது கனவு எவ்வளவு காலம்நேரம் என்று கணக்கிட்டுக்கொளுங்கள். எனவே அவர்களுக்கு ரகசியம் பெற போதிய நேரம் உள்ளது. கனவில் யாரேனும் இறந்து போனால் அவர்களை நிஜத்தில் எழுப்ப முடியாது, அவர்கள் infinity நேரக் கனவுக்குள் சென்றுவிடுவார்கள். இன்னொரு சுவாரஸ்யம் என்னவென்றால் இவர்கள் ஒவ்வொருவரின் ஆழ்மனதில் இருக்கும் சில கதாபாத்திரங்கள் எல்லாக் கனவுகளிலும் வந்து வம்பு பண்ணும். உதாரணம் சில வருடகள் முன் இறந்துவிட்ட ஹீராவின் மனைவி, எல்லாக் கனவிலும் பொறியாளரை (ஹீரோயினை) கொலை செய்ய அலைவாள்.
ஒவ்வொரு கனவையும் கலைக்க ஒரே வழி யாரேனும் அவர்களை ஒவ்வொரு தூக்கத்தில் இருந்தும் எழுப்ப வேண்டும். உயரத்தில் இருந்து அவர்களை கீழே தள்ளுவத்தின் மூலமே அது சாத்தியம். இதற்காக ஒவ்வொரு நிலையிலும் ஒரு நபரை விழித்திருக்க வைத்துவிட்டு மற்றவர்கள் இணைந்து அடுத்த கனவு காண்பார்கள். ஆனால் துரதிஷ்ட வசமாக முதல் கனவில் அவர்கள் உறங்கிக்கொண்டு சென்றுகொண்டிருக்கும் கார் பாலத்தின் மேலிருந்து கீழே விழும். இருந்தாலும் கீழே விழும் அந்த நேரத்தில் மூன்றாவது அல்லது நான்காவது கனவில் பல மணிநேரங்கள் களிக்கலாம் (மூளை வேகமாக செயல்படுவதால்). But கார் கீழே விழுவதால் அங்கு ஒரு free fall இருக்கும். எனவே அடுத்த கனவிலும் zero gravity யாக மாறிவிடும். Gravity இல்லாமல் எப்படி அவர்களை கீழ தள்ளி எழுப்ப முடியம்? Complicated. இதை ஹீரோவின் உதவியாளன் அறிவுப் பூர்வமாக கையாள்வான் ஒரு கட்டிடத்தின் lift (elevator) -க்குள் இரண்டாவது கனவில் தூங்கும் நான்கு பேரையும் இழுத்துச் சென்று அதை வேகமாக மேல்நோக்கி செலுத்துவான்.
இவ்வாறு படம் முழுவதும் நுணுக்கங்கள் நிறைத்திருக்கும். நான் முதல் பத்தியில் கேட்ட கேள்விகள் அனைத்தும் படத்தில் எங்காவது நமக்கு நாமே கேட்போம். அவர்களின் கூட்டு முயற்சி (சதி) வெற்றி பெற்றதா என்பது கடைசியில் தெரியும். டைரக்டர் climax இல் வைத்த பன்ச் இருக்கையை விட்டு எழ மனசு வராது. இன்னொரு மூன்று முறை பார்த்தல் தான் என்னால் முழுதாக விமர்சிக்க முடியும்.
romba correct... definitely have to watch it again... ippo thaan naanum paathuttu vandhen!!! great concept and felt satisfied after watching a movie,,,, romba naal kalichu!!!!
ReplyDeleteநானும் இந்த மாதிரி ஒரு படம் எடுக்கணும் போல் இருக்கு. ஆனா சத்தியமா அதுக்கு நான் producer அல்ல. Christoper Nolan தைரியசாலி எல்லா படத்துக்கும் அவர்தான் producer -உம் கூட.
ReplyDelete