Saturday, July 10, 2010

மெழுகுவர்த்தி

ஒரு மெழுகுவர்த்தி
தன் உயிர் உருக்கி
இரவென்னும் திரையில் விடியும்வரை
கண்ணீரோடு உயில் எழுதிச் சாகிறது.
சுடர் சிந்தும் ஒளியெல்லாம் உயிரெழுத்து
தரையில் சிந்திக்கிடப்பதோ மெய்யெழுத்து

No comments:

Post a Comment