Saturday, July 17, 2010

உருண்டையான கல்

சென்ற ஆண்டின் என் வகுப்பறை நிகழ்வு ஒன்றை பகிர்ந்து கொள்கிறேன். Oklahoma பல்கலைக்கழகத்தில் சேர்ந்த முதல் வாரம், அனைத்துத் துறைகளைச் சேர்ந்த புதிய PhD மாணவர்களுக்கும் சேர்ந்து Orientation Program என்னும் துவக்கக் கலந்தாய்வு மூன்று நாட்கள் நடந்தது. நாங்கள் மொத்தம் 150 பேர் 30 -க்கும் மேற்ப்பட்ட நாடுகளில் இருந்து வந்து புதிதாய் சேர்ந்திருந்தோம்*. Teaching Assistant -ஆக பணியாற்றவிருக்கும் எங்களுக்கு அமெரிக்க வகுப்புகளைக் கையாள்வது குறித்து மூன்று நாட்களும் வெவ்வேறு விதமான தகவல்களும் பயிற்சிகளும் வழங்கப்பட்டது. அமெரிக்க இளங்கலை மாணவர்களுக்குப் பாடம் எடுக்கும் போது நாங்கள் தெரிந்துவைத்துக்கொள்ள வேண்டிய Ethics, நாங்கள் சந்திக்கப் போகும் சிக்கல்கள், மாணவர்களை ஊக்குவிக்கும் கலை, வகுப்பில் பேசவேண்டியவை பேசக்கூடாதவை என்று பல தலைப்புகளில் வெவ்வேறு அறைகளில் கலந்தாய்வுகள் நடந்தது. இரண்டாவது நாள் நடந்த "மாணவர்களை ஊக்குவிப்பது" பற்றிய கலந்தாய்வு அறையில் 40 பேர் இருந்தோம். மற்றவர்கள் வேறு அறைகளில் கலந்துகொண்டனர். 

Natural Science -துறையை சார்ந்த விஞ்ஞானி ஒருவர் எங்களுக்குப் பயிற்றுவித்தார். Tennis Ball அளவுள்ள உருண்டையான ஒரு கூலாங்கல்லோடு வகுப்பிற்குள் நுழைந்தார். அந்தப் பொருளைக் காட்டி "இது என்ன?" என்றார். வெவ்வேறு பதில்களோடு "கல்" என்ற பதிலும் ஒலித்தது. கல் என்பதை ஒப்புக்கொண்டவர், அது ஏன் உருண்டையாக இருக்கிறது என்றார். அக்கேள்விக்கு எளிதாக பதில் அளிக்க முடியாது, பல ஆய்வுகள் நிகழ்த்த வேண்டும். வாசிக்கும் உங்களுக்கு ஏதாவது யூகம் இருக்கிறதா? 

1. "ஆறுகளால் அடித்து வரப்பட்டதால் அப்படி இருக்கிறது" என்று ஒரு மாணவர் கை உயர்த்தினார். "பாராட்டுகிறேன். ஆனால் இந்தக் கல் தென் அமெரிக்கக் கண்டத்தில் உள்ள ஒரு நாட்டில் (பெயர் மறந்துவிட்டது) இருந்து எடுக்கப் பட்டது. அந்த இடத்தில் ஆறுகள் இருத்த அடையாளமே இல்லை" என்றார். 

 2. "யாராவது அதை அப்படிச் செதுக்கியிருப்பார்கள்" என்றார் இன்னொரு மாணவர். "நன்றி. ஆனால் இந்தக் கல் 100 Million ஆண்டுகள் பழமையானது  என்று ஆய்வுகள் நிரூபிக்கின்றன. மனிதன் 2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தான் தோன்றினான்" என்றார் பேராசிரியர். அதுவரை அலட்சியமாக இருந்தவர்கள் attention ஆனார்கள். அந்த கல்லின் மீது ஒரு வியப்பும் மரியாதையும் வந்தது. 

3. "எரிமலைக் குழம்பு அதை உருக்கியிருக்கும்" என்று ஒரு மாணவர் சொன்னார். "அந்தப் பகுதியில் எரிமலை இல்லவே இல்லை" என்றார் பேராசிரியர். மேலும் ஆர்வம் அடைந்தோம். 

4. இன்னொருவர் - "கடவுள் அதை அப்படிப் படைத்தார்" . சிரிப்பொலி. 

5. நீண்ட அமைதிக்குப் பின், "அது ஒரு விண்கல்" என்றார் ஒருவர்.  "இது பூமியைச் சேர்ந்த கல்தான் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது" - பேராசிரியர்.

6. எறும்பு ஊரித் தேய்ந்த கல் என்று நான் சொல்லியிருக்கலாம். நம்ம ஊர் பழமொழி அவர்களுக்கு தெரியாது. எனக்கு விளக்கவும் தெரியாது. 

அதற்க்கு மேல் எங்கள் மண்டையில் ஒன்னும் இல்லை என்று தெரிந்துகொண்டு அவரே விடை சொன்னார். "இது ஒரு Dinosaur தவறுதலாக விழுங்கிவிட்டுக் கக்கிய / கழித்த கல். Dinosaur -களின் வயிற்றில் இருக்கும் அமிலம் (stomach acid) மிக concentrated ஆனவை, இந்தக் கல்லைப் பாதி உருக்கி விட்டிருக்கிறது. பொதுவாக reptiles அனைத்திற்கும் strong stomach acid உண்டு, எத்தனை பெரிய ஜீவன்களை விழுங்கினாலும் பாம்பு, முதலை, பல்லி போன்றவை அதை எளிதில் ஜீரணம் செய்துவிடும். இந்தக் கல் எடுக்கப் பட்ட இடத்தின் அருகில் சில Dinosaur களின் எலும்புகளும் கிடைத்தன. இந்தக் கல்லின் காலம் Dinosaur காலத்தோடு ஒத்துப் போகிறது. வேறு எந்த வழியிலும் இந்தக் கல் உருண்டை ஆக வாய்ப்பில்லை" என்று ஆச்சரியப் படுத்தினார். "உங்களுக்காக இதை எடுத்து வந்தேன். மீண்டும் இதை Museum -இல் ஒப்படைக்க வேண்டும்" என்றார். 

"இப்படிதான் ஒரு வகுப்பறையைக் கையாள வேண்டும், மாணவர்களை ஈர்க்க வேண்டும், விடைகளை அவர்களிடம் இருந்து வாங்கவேண்டும்" என்பதாக நீண்டது அந்த கலந்தாய்வு. 

அவர் சொன்ன அந்த "Sam Nobel Museum of Natural History" எங்கள் வீட்டில் இருந்து 100 meter தூரத்தில் தான் இருக்கிறது. அதனாலேயே ஒரு முறை கூட உள்ளே நுழைந்ததில்லை. "நாளைக்காவது குடையை பிடித்துக்கொண்டு ஒரெட்டு போய்வர வேண்டும்" என்று இந்த மடல் தட்டச்சும் போது நினைத்துக்கொள்கிறேன்.. மழைக்காலம். 

உபகுறிப்பு: அந்த 150 புதிய மாணவர்களில் 35% Chinese, 25% Indians, 10% from East Asian Countries, 10% from Gulf Countries, 10% Europeans, 5% Africans, 5% South Americans and Canadians. That program was only for international students. 

பப்பூன் வேஷம் போட்டுக்கொண்டு சைக்கிளில் வகுபிற்க்கு வந்த இயற்பியல் விஞ்ஞானி செய்த வித்தைகள் பற்றி இனொரு நாள் எழுதுகிறேன்

For the reference to the years, see below chat of History of the Earth. 
Geological Clock with events and periods. Ma - a megayear (Million years), Ga - a gigayear (billion years). Earth's (solar system's) age is around 4.5 Ga or 4500 Ma.

No comments:

Post a Comment