கடந்த ஜூலை மாதம், இயற்கை உணவுகளை மட்டும் இனி சாப்பிடவேண்டும் என யோசித்து முடிவெடுத்தேன். ரொம்ப வெயில் அடித்தால் இப்படி ஏதாவது தோன்றும். ஞாயிறு நன்மதியம் 1 மணிக்கு 105 F வெப்பத்தில் சைக்கிளில் கிளம்பினேன். முன்னதாக இணையதளத்தில் தேடி "The Earth - Natural Food Store" -இன் முகவரியையும், Google Maps -இல் வழியையும் பார்த்து வைத்திருந்தேன். 309 South Flood Street -ஐ அடைய 5 km அழுத்த வேண்டும்.
மொட்டை வெயிலில் சட்டை நனைய அழுத்தியதில் பழைய நினைவுகள் எல்லாம் தோன்றியது. போன ஜென்ம ஞாபகம் வரவில்லை என்றாலும், வெயிலோடு விளையாடிய பால்ய வயது காட்சிகள் நான் போகும் பாதை எங்கும் படர்ந்தன. "ஆட்டோகிராப்" படத்தில் வருவது போல் என் சைகிள் டயருக்கு முன்னால் உள்ள காட்சிகள் கிராபிக்சில் கரிசல் காடுகளாய் மாறின. கோடை காலங்களில் ஓடித்திரிந்த பொழுதுகள், வேப்ப மரத்தின் வாசம், சுள்ளி பொறுக்கி சும்மாடு வைத்துச் சுமக்கும் கிழவி, முக்காடு போட்டு எருமை மேய்க்கும் வடுகன், புதுப்பை கைகாட்டியில் இருந்த பூவரச மரத்து நிழல், நொங்கு வண்டி என கோடைப் பெரும்போழுதின் கருப்பொருள், உரிப்பொருள் ஊடாகப் பயணித்து நான் சேரவேண்டிய "The Earth - Natural Food Store" அருகில் வந்து சேர்த்தேன்.
கடையின் முன்பு இருந்த பசுமையான மரம் பெயர்ப்பலகையை மறைத்திருந்ததால் அடையாளம் தெரியாமல் சுற்றி இருந்த வீதிகள் அனைத்திலும் தேடினேன். யாரிடமாவது கேட்கலாம் என்றால் கண்ணனுக்கு எட்டிய தூரம் வரை தெருவில் யாரையும் காணாம். அது வழக்கமானது தான், Norman பெரிய city அல்ல. வீடுகளும் மரங்களும் நிறைந்த சிறிய நகரம். எல்லா வீடுகளும் பூட்டியே இருக்கும். கதவை தட்டினாலும் சங்கிலிக்கு பின்னல் இருந்துதான் எட்டிப் பார்ப்பார்கள். கொளுத்தும் வெயிலில், வெறித்த தெருக்களில், பூட்டிய வீடுகளுக்கு நடுவில் ஒற்றையாய் நின்ற அனுபவம் நிறைய உண்டு. எங்கள் சொந்த ஊரை சுற்றிய கிராமங்களுக்கு வருடந்தோறும் மே மாதங்களில் எங்கள் பள்ளி விளம்பரத்துக்காக சென்றதுண்டு. பெரும்பாலும் வீடுகள் பூட்டியே இருக்கும், கதவுகளில் நோட்டீஸ் சொருகிவிட்டு வருவோம்.
கடைக்கு நேர் எதிரில் இருந்த ஒரு வீட்டிலிருந்து மூன்று வயது குழந்தை வெளியே வந்தது. சிவப்பாகத்தான் இருந்தது ஆனால் மூன்றாம் தலைமுறை முன்னோர்கள் ஆபிரிக்காவில் இருந்து இடம் பெயர்ந்த சாயல் தெரிந்தது. அதன் பெற்றோர்கள் பிக்னிக் செல்வதற்கான பொருட்களோடு வெளியே வந்தார்கள். அவற்றை காரில் ஏற்றிக்கொண்டிருக்கும் போது என்னைப் பார்த்து, "Hi, how's the day? How could I help you?" என்றார் கணவர். கறுப்புக் கண்ணாடியை கழற்றிவிட்டு நான் விவரத்தை சொன்னதும், அப்படி ஒரு கடையை அவர் பார்த்ததே இல்லை என்று மனைவியிடம் விசாரித்தார். பச்சை கலர் கட்டடம் அதன் பின்னால் வட்டமாக கார் பார்கிங் இடமும் உள்ள அந்த கடைக்கு தான் ஒருமுறை சென்றிருப்பதாகவும், ஆனால் இடம் சரியாக நினைவில்லை என்றும் சொன்னாள் தலைவி.
உடனே தலைவர் டவுசர் பாக்கட்டில் இருந்து iPhone -ஐ எடுத்தார். சும்மா இருந்த செயற்கைக் கோலை சொறிந்து நான் சொன்ன முகவரியை GPS technology -ஐ கொண்டு தேடினார். அதை என்னிடம் காண்பித்து, "நாம் இப்போது இங்கே நிற்கிறோம், இப்படியே ஒரு மைல் தெக்கால போய், சோத்தாங்கை பக்கம் திரும்பினால் ஒரு பள்ளிக்கூடம் வரும், அதை ஒட்டி சிறிய பச்சை கட்டடம் இருக்கும் அதுதான் நீங்கள் தேடி வந்த கடை" என்றார்.
தலைவியும் அதை ஆமொதித்ததைத் தொடர்ந்து நன்றி சொல்லி விடைபெற்றேன். இப்போது சைக்கிளில் செல்லும் போது வேறு ஞாபகம் தொற்றிக்கொண்டது. விஞ்ஞான வளர்ச்சியை எண்ணி வியந்தேன், முகவரியை வைத்துக்கொண்டு நம்ம ஊரில் எத்தனை பேரிடம் வழி கேட்டிருப்போம், கதவு எண்ணை பார்த்துக்கொண்டு எத்தனை தெருக்கள் நடத்திருப்போம், இப்போது கணினியை தட்டினால் வரைபடம் வருகிறது, 500 ஆண்டுகளுக்கு முன் புவியியலாளர்கள் கப்பலில் பயணித்து கண்டறிந்த உலக வரைபடம் எப்படி செயற்கை கோல் வரைபடத்தோடு கச்சிதமாக ஒத்துப்போகிறது, என்றெல்லாம் வியந்து இறுதியாக அவர் சொன்ன அந்த பள்ளிக்கூடத்திற்கு வந்து சேர்ந்தேன். "Edmond Elementary School, 918 South Flood Street" என்று போட்டிருந்தது. பக்கத்தில் பச்சை கட்டடம் எதுவும் இல்லை. நான் தேடிவந்த கதவு எண் 309.
காணலில் கருகி நின்ற நான், என் அறை நண்பனுக்கு போன் செய்து, முகவரியை கணினியில் சரிபார்க்கச் சொன்னேன். 309 சரியான எண்தான் என்று சொன்னவன், கடையின் தொலைபேசி எண்ணையும் கொடுத்தான். கடைக்கு அழைத்து வழி கேட்டேன். 918 இல் இருந்து பின்னோக்கி வாருங்கள் 309 வரும் என்றார். இதைத் தான நாங்க எங்க ஊரிலும் செய்வோம், என்று வந்த வழியே பயணித்தேன். இப்பொது என் எண்ணங்கள் என்னவாக இருக்கும் என்று நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு வீடாகப் பார்த்து கடைசியில் எனக்கு வழி சொன்னவர் வீட்டுக்கே வந்து நின்றேன். வீடு பூட்டியிருந்தது,கதவு எண் 308 என்று போட்டிருந்தது, எதிரில் பார்த்தேன் "309 The Earth - Natural Food Store" என்ற பச்சை கட்டடம் இருந்தது. அடப்பாவிகளா எதிர்த்தாப்பல இருக்கிற கடையை இதுவரைக்கும் எட்டிக்கூட பார்த்ததில்லையா! பத்து மீட்டருக்கு அந்தப்பக்கம் இருக்கும் கடையை தேட ஆயிரம் கிலோமீட்டருக்கு அந்தப்பக்கம் இருக்கும் satellite தேவைப்படுது! தெக்கையும் வடக்கையும் என்னை அலைய விட்டதுதான் மிச்சம். 105 F சூட்டில் என் மனநிலை உங்களுக்கு புரிந்திருக்கும்.
முழுவதுமாக dehydrate ஆகி கடைக்குள் சென்றேன், அது இயற்கையாக விளைத்த காய்கறிகள் விற்கும் கடை. அங்கிருந்த பெண் , Green Environment-ஐ ஊக்குவிக்க, சைக்கிளில் வரும் வாடிக்கையாளருக்கு 20% தள்ளுபடி தருவோம் என்று சொன்னார். காதில் தேன் வந்து பாய்ந்தது.